மேலும் அறிய

Bhavaneeswari IPS Profile | மேற்கு மண்டலத்தின் முதல் பெண் ஐ.ஜி.. குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பணம்

ஆண்களின் பெயர்கள் மட்டுமே இருந்த வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.க்கள் பட்டியலில், 19 வதாக இடம்பெற்ற பவானீஸ்வரியின் பெயரே ஒரு பெண்ணின் பெயராக முதலாவதாக இடம்பெற்றது.

கோவையை தலைமையிடமாக கொண்டு, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவை மற்றும் சேலம் ஆகிய இரண்டு காவல் சரகங்களுக்கு உட்பட்ட, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களின் தலைவராக ஐ.ஜி. எனப்படும் மண்டல காவல் துறை தலைவர் நியமிக்கப்படுவார். இது மிகவும் முக்கியமான பொறுப்பு என்பதால், இந்தப் பணிக்கு அனுபவமும், திறமையும் உள்ள நபர்களே நியமிக்கப்படுவது வழக்கம்.

கடந்த 2002 ம் ஆண்டில் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் நரிந்தரபால் சிங் என்பவர் மேற்கு மண்டலத்தின் முதல் காவல் துறை தலைவராக பணி புரிந்தார். அது முதல் கடந்த 2023 ம் ஆண்டு வரை 18 ஐ.ஜி.க்கள், மேற்கு மண்டல காவல் துறை தலைவராக பணியில் இருந்துள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள அனைவரும் ஆண்களாகவே இருந்தனர்.

ஆனால், கடந்த 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சுதாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அப்பதவிக்கு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்த கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக மேற்கு மண்டல காவல் துறையின் முதல் பெண் ஐ.ஜி. என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஆண்களின் பெயர்கள் மட்டுமே இருந்த வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.க்கள் பட்டியலில், 19 வதாக இடம்பெற்ற பவானீஸ்வரியின் பெயரே முதல் பெண்ணின் பெயராக  இடம்பெற்றது.

தமிழ்நாட்டை சேர்ந்த கே.பவானீஸ்வரி 2002 ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக தனது பணியை துவக்கினார். கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறை அதிகாரியாக பணி புரிந்த அனுபவம் கொண்டவர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையாளர், திருச்சி மண்டல காவல் துறை துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி உள்ளார்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் உடனும் பணி புரிந்த அனுபவம் பெற்றவர் பவானீஸ்வரி. பின்னர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய அரசு அதிகாரிகள் மீதான சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைகள் இவரது மேற்பார்வையில் தான் நடந்து வந்தது. பின்னர் இலஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக பவானீஸ்வரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2023 ம் ஆண்டு மேற்கு மண்டல காவல் துறை தலைவராக நியமிக்கப்பட்ட பவானீஸ்வரி, திறம்பட பணியாற்றி வருகிறார்.

23 ஆண்டுகளாக காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வரும் பவானீஸ்வரி, பணி புரிந்த இடங்களில் எல்லாம் தனக்கென தனித்த முத்திரை பதித்துள்ளார். இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஜனாதிபதி விருது பவானீஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தனது சிறப்பான பணிக்காக அவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கடினமாக துறைகளில் இருக்கும் போது தான் திறமைகள் வெளிப்படும். அந்த வகையில் ஆணாதிக்கம் மிகுந்த காவல் துறை பணியில் ஒரு பெண்ணாக தனது திறமையான பணிகளின் மூலம் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக மிளிர்கிறார், பவானீஸ்வரி.

ஐபிஎஸ் அதிகாரிக்கே உரிய மிடுக்கோடு, குற்றவாளிகள் மத்தியில் கடினமானவராக பவானீஸ்வரி இருந்தாலும், மற்றவர்கள் மீது காட்டும் அன்பும், பரிவும், பழகும் விதமும், அவரின் பொறுப்புக்கு மேலும் அழகு சேர்ப்பதாக சிலாகின்றார்கள் அவரது நண்பர்கள்

செய்திகள் வீடியோக்கள்

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget