"வண்டிய SPACE-க்கு விட்றா" டாம் க்ரூஸ் ADVENTURE திருமணம்! விண்வெளி... ஸ்கை டைவிங்
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸூக்கும் அனா டி அர்மாஸுக்கும் விண்வெளியில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்கைடைவிங் செய்தபடியே Adventure திருமணம் செய்யும் ப்ளானிலும் இருக்கிறார்களாம்.
அதிரடியான மற்றும் ஆபத்தான ஆக்ஷன் காட்சிகளில் கூட தானே நடிப்பதன் மூலம், சர்வதேச அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை டாம் க்ரூஸ் உருவாக்கியுள்ளார். அவரும் பிரபல நடிகை அனா டி அர்மாஸும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாகவே தகவல் கசிந்து வந்தது.
இந்தநிலையில் 63 வயதான டாம் க்ரூஸும் 37 வயதான அனா டி அர்மாஸ் –ம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். ஆனால் வழக்கமான திருமணத்தை போல் இல்லாமல் தங்களுடைய திருமணம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர்.
அதனால் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் முடிவை இருவரும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகள் மூலம் பிரபலமான டாம் க்ரூஸ் தனது திருமணத்தையும் அதே பாணியில் அதிரடியாக நடத்த முடிவெடுத்துள்ளாராம். அதன்படி விண்வெளி அல்லது நீருக்கு அடியில் தான் தன்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என நினைக்கிறார். விண்வெளியில் ஸ்கை டைவிங் செய்து கொண்டே திருமணத்தை நடத்தும் ஐடியாவும் இருவருக்கும் இருப்பதாக சொல்கின்றனர். அதன்படி, விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் ஜோடி என்ற பெருமையை பெற அவர் யோசித்துள்ளாராம்.
டாம் க்ரூஸுக்கு ஏற்கனவே 3 முறை விவாகரத்து பெற்றவர். அனா டி அர்மாஸும் ஒரு முறை விவாகரத்து பெற்றுள்ளார். திருமணம் குறித்த செய்திகள் வேகமாக பரவி வரும் நிலையில் இருவரும் கடல் சார்ந்த சூப்பர் நேட்சுரல் படமாக உருவாகும் ”டீப்பர்” எனும் திரைப்படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





















