பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
மாருதி சுசுகி நிறுவனம் மாருதி பலேனா காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக எவ்வளவு அளித்துள்ளது? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி நிறுவனம். ஒவ்வொரு கார் நிறுவனமும் தனது கார்களுக்கு பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி அளித்து வருகிறது.
Maruti Baleno தள்ளுபடி எவ்வளவு?
பொங்கல் பண்டிகை வரும் இந்த ஜனவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தன்து பல்வேறு கார்களுக்கு சலுகைகள் அளித்துள்ளது. அப்படி மாருதி நிறுவனம் அவர்களின் மிகப்பெரிய வெற்றிகரமான படைப்பும், பட்ஜெட் விலை காரான Maruti Baleno காருக்கும் ஜனவரி மாத தள்ளுபடி அறிவித்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் Maruti Baleno காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 45 ஆயிரம் அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு புதிய கார் வாங்க வேண்டும் என்று விரும்பிய வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.
9 வேரியண்ட்கள்:
இந்த Maruti Baleno கார் ஒரு ப்ரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் இந்த கார் ஆகும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது இந்த கார். நெடுஞ்சாலைகளிலும், நகர்ப்புறங்களிலும் ஓட்டுவதற்கு மிகவும் இலகுவான காராக இந்த கார் உள்ளது.
இந்த Maruti Baleno காரில் மொத்தம் 9 வேரியண்ட்கள் உள்ளது. இந்த காரில் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படை மாடலான Baleno Sigma MT-வின் தொடக்க விலை ரூபாய் 7.20 லட்சம் ( ஆன்ரோட் விலை). இதன் டாப் வேரியண்ட் Baleno Alpha AGS ரூபாய் 10.82 லட்சம் ஆகும்.
பெட்ரோல், சிஎன்ஜி:
Baleno Zeta MT CNG மற்றும் Baleno Zeta MT CNG ஆகிய 2 வேரியண்ட்கள் மட்டும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. மற்ற 7 வேரியண்ட்களும் பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 88.5 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர்களை கொண்டது. இந்த கார் 23 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
இந்த காரின் உட்கட்டமைப்பும், வடிவமும் மிகவும் வசதியாக உள்ளது. 5 இருக்கைகள் கொண்ட இந்த கார் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் வசதியானதாக உள்ளது. 318 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 360 டிகிரி கேமரா, பின்பக்க கேமரா, டூயல் ஏர்பேக் வசதிகள், ப்ரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதிகள் உள்ளது.





















