Madhampatty Rangaraj : ’’2 வருஷம்..3 முறை ABORTION’’கர்ப்பமாக்கி ஏமாற்றிய ரங்கராஜ் ஜாய் பகீர்
கடந்த சில நாட்களாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது இரண்டாவது மனைவி என சொல்லப்படும் ஜாய் கிரிஷில்டா அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளில் ரங்கராஜ் ஜாயை 4 முறை கர்ப்பமாக்கியதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஷில்டா கமிஷனர் அலுவலக்கத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ் சேர்ந்து வாழ மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ரங்கராஜிற்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் முறையாக விவாகரத்து பெறாமலேயே அவர் ஜாய் கிரிஷில்டாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஜாயும் ஏற்கனவே திருமணமாகி முறையாக விவாகரத்து பெற்றவர்.அவருக்கு ஓர் மகனும் இருக்கிறார். இந்நிலையில் தான் அவர் ரங்கராஜுடன் சென்னையில் தனியார் குடியிருப்பில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இருவரும் காதலித்து வருகிறார்கள் லிவினில் வாழ்ந்து வருகின்றனர் என்றெல்லாம் ரசிகர்கள் நினைத்து கொண்டிருக்க திடீரென ஜாய் கிரிஷில்டா ரங்கராஜுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்து ஷாக் கொடுத்தார்.
இதனையடுத்து ரங்கராஜ் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட ஜாய் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ரங்கராஜ் கர்ப்பமாக்கி மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு ஜாய் கிரிஷில்டா பிரத்யேக பேட்டி அளித்திருந்தார்.
அதில் தன்பக்க நியாயங்களை கூறிய ஜாய், ரங்கராஜ் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியாக தெரிவித்தார். மேலும் ரங்கராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன் என கூறியே தன்னுடன் பழகியதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கர்ப்பமாக்கியதாகவும் பகீர் கிளப்பினார். ரங்கராஜின் வற்புறுத்தலால் மூன்று முறையும் கருவை கலைத்த கிரிசில்டா தற்போது 4வது முறை கர்ப்பாமாகியுள்ள நிலையில், தன்னுடைய 7 மாத குழந்தைக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என போராடி வருகிறார்.





















