Coimbatore Corporation Election News: சொல்லி அடித்த செந்தில்பாலாஜி!எஸ்.பி.வேலுமணியைக் கதறவிட்ட ‘கரூர் பார்முலா’
Coimbatore Corporation Election News: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டின் மொத்த கவனமும் கோவை மீதே இருந்தது. அதற்கு காரணம் இந்த தேர்தல் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கான தேர்தல் போட்டியாக மட்டுமில்லாமல், கெளரவப் பிரச்சனையாக மாறியிருந்ததே காரணம். கோவை அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டுமென்ற முனைப்போடு அதிமுகவினரும், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் வெற்றி பெற வேண்டும் என திமுகவினரும் கெளரவப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தேர்தல் பணியாற்றினர். அதுமட்டுமில்லாமல் அதிமுகவில் அதிகாரமிக்கவராக விளங்கி வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவிற்கு வெற்றியை தேடி தருவாரா என்பதும் கூடுதல் முக்கியத்துவம் பெற காரணமாக உள்ளது.





















