PM Modi : ஜனாதிபதியை சந்தித்த மோடி..ஜூன் 9 பதவியேற்பு!
மத்தியில் ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்ததையடுத்து, குடியரசு தலைவர் மாளிகை வெளியே செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய மோடி, "தேசிய ஜனநாயக கூட்டணியால் வலுவான, நிலையான அரசு அமைக்கப்படும்" என உறுதிபட தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய அரசியலில் NDA ஒரு வலுவான அடித்தளத்தை பதித்துள்ளது
கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் அண்மையில் தான் புதிய அரசு ஆட்சியமைத்தது.
ஆனால் சில நாட்களிலேயே அவர்கள் மீதான நம்பிக்கை உடைந்து, மாயையிலிருந்து மக்கள் வெளிவந்துவிட்டனர்
NDA கூட்டணியை கர்நாடகா மற்றும் தெலங்கானா மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்
நான் தமிழ்நாடு பாஜகவை பாராட்ட விரும்புகிறேன்
சிலருக்கு தெரியும், எங்களால் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், இந்த யுத்தத்தில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்
தமிழ்நாட்டில் எங்களால் வெல்ல முடியவில்லை, ஆனால் அங்கே NDA வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும் வேகம் ஒரு தெளிவான செய்தியை தருகிறது
நாளை அங்கே என்ன எழுதியுள்ளது என்று தெரிகிறது
கேரளாவில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள்
அதனால் முதல் முறையாக கேரளாவிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.