Nitish Kumar "PM மோடி தான்மத்ததெல்லாம் நான் தான்"நிதீஷ் CONDITION
இந்திய கூட்டணி தரப்பில் இருந்தும் அழைப்பு விடுக்கப்படுவதால் முக்கிய இலாகாக்கள் மற்றும் துணை பிரதமர் பதவிக்கும் நிதிஷ் குமார் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன . இதானால் பாஜகவுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
18-வது மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கிடைத்துள்ளதால், மோடி 3.0 அமைச்சரவை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. அதற்கான வழிகாட்டல்களை இறுதி செய்யும் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.
மோடி 3.0 அரசு அமைவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கப்போவது கிங் மேக்கர்ரான ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ்குமாரும் தான். ஏனெனில், எதிர்பார்த்த அளவுக்கு பாஜக-வால் தனித்து இடங்களைப் பெற முடியவில்லை. தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணியில் உள்ள சந்திரபாபுவும் நிதீஷும் ஒத்துழைத்தால்தான், ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில்தான், ஐக்கிய ஜனதாதளத் தலைவர் நிதீஷ்குமார் தங்களது கட்சிக்கு முக்கிய அமைச்சரவை இலாக்காக்கங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளாராம். உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள், துணை பிரதமர் பதவிக்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன. ஆனால், துணை பிரதமர் இல்லாவிட்டால், குறைந்தபட்சமாக 4 கேபினட் அமைச்சர்களாவது தங்களுக்கு வேண்டும் என ஐக்கிய ஜனதாதளம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்
முதல் இரண்டு காலக் கட்டங்களைப் போல், மோடி 3.0, ஆட்சியில், பிரதமர் மோடியால் முழு வேகத்துடன், அவர் பாணியில் நினைத்ததை நிறைவேற்றும் வகையில் செயல்பட முடியுமா அல்லது கூட்டணி கட்சிகள் செக் வைத்து, சிக்கல்களைத் தருவார்களா என்பதற்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும். அதேபோல், சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் தொடர்ந்து ஆதரவு தருவார்களா என்பதும் பல மில்லியன் டாலர் கேள்வி என்றால் மிகையில்லை.