ராமேஸ்வரத்தில் தரமான டிரக்கிங் ஸ்பாட்.. 125 ஏக்கர் பிரம்மாண்டம்.. நோட் பண்ணி வச்சுக்கோங்க...
Rameswaram Trekking: " ராமேஸ்வரத்தில் ட்ரக்கிங் வசதியுடன் கூடிய சூழலியல் சுற்றுலா பூங்கா அமைக்கப்பட உள்ளது "

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு, பொதுமக்களிடையே வெளியே பயணம் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இயற்கை சூழல் நிறைந்த பகுதிகளுக்கு, ட்ரக்கிங் மேற்கொள்ளும் பழக்கம் வெளிநாடுகளைப் போல், இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக சுற்றுலா துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
தமிழக அரசு ட்ரக்கிங் செய்வதற்காக தனிமையாக இணையதளம் உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய மலைகளுக்கு ட்ரெக்கிங் அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த திட்டம் தமிழக சுற்றுலா சுற்றுலாத்துறைக்கு மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ட்ரக்கிங் வசதியுடன், சுமார் 125 ஏக்கரில் புதிய சூழலியல் சுற்றுலா மையம் அமைக்க நடவடிக்கையில் தமிழக சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம்
தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் இருந்து வருகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள கோயில், தனுஷ்கோடி, ராமர் பாதம், குருசடை தீவு உள்ளிட்ட இடங்களுக்கு ஆண்டுதோறும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ராமேஸ்வரத்திற்கு வட இந்தியர்கள் அதிகளவு படை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு நடவடிக்கை
எனவே, ராமேஸ்வரத்தில் கூடுதலாக சுற்றுலாத் தலங்களை உருவாக்கும் நடவடிக்கையில் தமிழக சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாதம் அருகே, தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் கல்லாங்காடு உள்ளது. இந்தப் பகுதியில் அதிக அளவு சீமை கருவேல மரங்கள் இருக்கின்றன. சீமை கருவேல வனப்பகுதி நிலத்தை சீரமைத்து மரக்கன்றுகள் நடுவு செய்ய சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பகுதியில், ட்ரக்கிங் செல்லும் வகையில் வனப்பகுதி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த ஆண்டு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சூரியன் சுற்றுலா மழையின் அமைக்க திட்ட மதிப்பீடு, தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு இந்த காட்டுப்பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சூழலியல், மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட சுற்றுலா மையமாக இது அமையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




















