மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து ஊற்றெடுக்கும் தண்ணீர் அருவியாக எங்கு இருக்கு தெரியுமா..?
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு மூலிகைச் செடிகள் நடுவில் கடந்து வரும் நீரில் குளிப்பதால் பல்வேறு நோய்களில் மீண்டு வர உதவுவதாக கூறுகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
மேலும் கும்பக்கரை அருவியில் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு மூலிகைச் செடிகள் நடுவில் கடந்து வரும் நீரில் குளிப்பதால் பல்வேறு நோய்களில் மீண்டு வர உதவுவதாக கூறுகின்றனர். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய நீரானது கடும் குளிர்ந்த நிலையில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இயற்கை சூழலில் பசுமை நிறைந்த அடர்ந்த வனப் பகுதிகளுக்கு நடுவில் இந்த அருவி அமைந்துள்ளதால் கும்பக்கரை வனப்பகுதியில் விலங்கினங்கள் காட்டுமாடு சிறுத்தை அரிய வகை குரங்கினங்கள், மான், புள்ளி மான், மிளா மான் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்களும் உள்ளன.
KS Alagiri Press Meet: “ஸ்டாலின் நல்லாட்சியால் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும்” - கே.எஸ். அழகிரி
பல்வேறு வகையான மயில் உள்ளிட்ட பறவைகளும் பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகளும் இந்த மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றது. அருவிக்கு வருகின்ற வழியில் சுற்றுலா பயணிகள் வன விலங்குகள் மற்றும் பறவைகளை காண்பதற்கு எளிதாகவும் கண்டு ரசிப்பதற்கு ஏதுவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வண்ணம் கும்பக்கரை அருவி பகுதியை சுற்றிலும் தேவதானப்பட்டி வனத்துறையினரால் கம்பி வேலி அமைத்து வனவிலங்கு அச்சம் இன்றி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாகவும் அமைந்துள்ளது.
KS Alagiri Press Meet: “ஸ்டாலின் நல்லாட்சியால் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும்” - கே.எஸ். அழகிரி
வனத்துறையினர் அருவியில் குளிக்கின்ற பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் வனப்பகுதிக்குள் இருக்கும் இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுருளி அருவிக்கு அடுத்தபடியாக கும்பக்கரை அருவி உள்ளதால் இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிரித்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்