YouTube: விளம்பரம் வராது! சூப்பர் குவாலிட்டி! இலவசமாக பெறலாம் யூ டியூப் ப்ரீமியம் பேக்கேஜ்!
யூடியூப் ப்ரீமியம் பேக்கேஜை இலவசமாக சில மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்
யூடியூப்..
வீடியோ செயலிகளில் முதன்மையானது யூடியூப். எந்த வீடியோவாக இருந்தாலும் யூடியூப்பில் சென்று தேடுவதுதான் முதல் வேலை. யார் வேண்டுமென்றாலும் தனிக் கணக்கு தொடர்ந்து யூடியூப்பில் வீடியோ பதிவேற்றலாம். அதனை மற்றவர்கள் பார்க்கும் பட்சத்தில் பார்க்கும் நபர்களுக்கு ஏற்ப ஒரு தொகை கொடுக்கப்படும். இதற்காக பலரும் பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் சில விதிமுறைகள் உண்டு. யூடியூப்பை பொறுத்தவரை விளம்பரங்களே அதற்கு வருமானத்தை தருகின்றன.
அதாவது, வீடியோ நடுவே ஓடும் விளம்பரங்களை வைத்து யூடியூப் காசு பார்க்கிறது. உங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லையென்றாலும் அதற்காகவும் தனி ப்ரீமியம் பேக்கேஜ் முறையை கூகுள் வைத்துள்ளது. அதற்கு நீங்கள் தனியாக கட்டணம் செலுத்தி ப்ரீமியம் பேக்கேஜை வாங்கிக்கொள்ளலாம். தற்போதைய செய்தி என்னவென்றால் இந்த ப்ரீமியம் பேக்கேஜை இலவசமாக சில மாதங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதே.
எப்படி?
குறிப்பிட்ட வகை செல்போன் மாடல்களை வாங்கினால் உங்களுக்கு 3 மாதங்களுக்கு யூடியூப் ப்ரீமியம் பேக்கேஜ் இலவசமாக வழங்கப்படும் என சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி சியோமி மற்றும் ரெட்மியின் ஸ்மார்ட் போன்களின் குறிப்பிட்ட வகை மாடல்களுக்கு இந்த ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான ஆஃபர் கொடுப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே இதுபோன்ற ஆஃபர்களை போகோ, சியோமி நிறுவனங்கள் கொடுத்துள்ளன.
ப்ரீமியம் பேக்கேஜை பெற்றால் நீங்கள் செல்போனிலேயே வீடியோக்களை நல்ல தரத்தில் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.ஆப் லைன் மியூசிக் அனுபவத்தையும் பெறலாம். Xiaomi 11, Xiaomi 12 Pro, Xiaomi 11T, or the Xiaomi 11i ஆகிய மாடல்களுக்கு இந்த ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. Redmi Note 11, Note 11S போன்ற ரெட்மியின் சில மாடல்களுக்கு 2 மாத ப்ரீ ப்ரீமியம் பேக்கேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. யூடியூப்பின் இந்த ஆஃபர் இந்திய பயனாளர்களுக்கு மட்டுமே. ப்ரீமியம் பேக்கேஜ்ஜை கட்டணம் செலுத்தி வாங்க வேண்டுமென்றால் மாதத்துக்கு ரூ. 129 செலுத்த வேண்டி வரும்.
முன்னதாக, தங்களது கொள்கைகளை மீறியும், அரசின் அல்லது சமூகத்தின் விதிமுறைகளையும் மீறியதாகவும் இந்த அதிரடி நடவடிக்கையை யூடியூப் எடுத்தது. விதிமுறை மீறல் மட்டுமின்றி, பொய் விளம்பரங்கள், புதுப்புது ஸ்பேம் வீடியோக்களையும் களை எடுத்துள்ளது யூடியூப். அதன்படி, 38 லட்சம் வீடியோக்களையும் யூடியூப் அதிரடியாக நீக்கியது. இந்தியாவில் மட்டும் 11 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்