Whatsapp Stickers | தீபாவளி கொண்டாட்டம். ஸ்டிக்கர் வெளியிட்ட வாட்சப்! இப்படித்தான் யூஸ் பண்ணனும்..
தீபாவளி பண்டிகையை ஒட்டி, வாட்சப் நிறுவனம் வாட்சாப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் புதிதாக அனிமேட்டட் ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, வாட்சப் நிறுவனம் வாட்சாப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் புதிதாக அனிமேட்டட் ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், வெறும் மெசேஜ்கள், இமேஜ்கள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி, பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்குப் பதிலாக இன்னும் எளிதாகவும், அழகாகவும் ஸ்டிக்கர்களால் வாழ்த்துகளைப் பகிரலாம். மேலும், தீபாவளி வாழ்த்துகளை ஸ்டிக்கர் வடிவத்தில் பகிர புதிதாக வேறு எந்த செயலியையும் டவுன்லோட் செய்யாமல், வாட்சாப் செயலியையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
`வாட்சாப் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணமயமான, அழகான ஸ்டிக்கர் பேக்கைத் தற்போது உருவாக்கி உள்ளது. இந்த ஸ்டிக்கர்கள் அனைத்து தரப்பினரையும் கவரும்படி உருவாக்கப்பட்டுள்ளன. உங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இந்த தீபாவளியை இன்னும் வண்ணமயமாக மாற்றுவதற்காக, இவற்றைப் பகிர்ந்துகொள்ள வாட்சாப் நிறுவனம் இந்த ஸ்டிக்கர் பேக்கை வெளியிடப்பட்டுள்ளது’ என வாட்சாப் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்சாப் செயலியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த ஸ்டிக்கர் பேக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாட்சாப் நிறுவனம் அளித்துள்ள லிங்கைப் பயன்படுத்தியும் இந்த ஸ்டிக்கர் பேக்கைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்காக வாட்சாப் நிறுவனம் இந்த லிங்கை அறிவித்துள்ளது: https://api.whatsapp.com/stickerpack/Diwali/?app_absent=0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாட்சாப் நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்டிக்கர்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து மகிழலாம். எனினும், இந்த தீபாவளி சிறப்பு ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த விரும்புவோர் தங்கள் ஸ்மார்ட்ஃபோனில் வாட்சாப் செயலியின் சமீபத்திய லேட்டஸ்ட் வெர்சனைப் பயன்படுத்துகிறார்களா என்று சோதனை செய்ய வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோரில் லேட்டஸ்ட் வெர்சனுக்கு வாட்சாப் செயலியை அப்டேட் செய்து கொள்ளலாம்.
உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் வாட்சாப் செயலியை அப்டேட் செய்த பிறகு, வாட்சாப் செயலிக்குள் செல்லவும். அதில் யாருடனாவது இருக்கும் சாட்டில் சென்று, கீபோர்டில் இருக்கும் ஸ்டிக்கர் ஐகானை அழுத்தவும். ஆப்பிள் ஐ ஃபோன் பயன்படுத்துவோருக்கு அதன் டெக்ஸ்ட் பாரின் வலது பக்கம் இந்த ஆப்ஷன் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்படுத்துவோர் GIF ஆப்ஷனுக்கு அருகில் உள்ள ஐகானில் ஸ்டிக்கர்ஸ் பகுதிக்குச் செல்ல முடியும்.
ஸ்டிக்கர்ஸ் பகுதியில் `+’ என்ற ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும். அதனைக் க்ளிக் செய்து, அதனுள் புதிதாக வாட்சாப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட `ஹேப்பி தீபாவளி ஸ்டிக்கர் பேக்’ என்பதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஸ்டிக்கர்களைப் பதிவிறக்கம் செய்த பிறகு, மீண்டும் வாட்சாப் சாட் பகுதிக்குச் சென்று, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை ஸ்டிக்கர் வடிவில் அனுப்பலாம்.
வாட்சாப் நிறுவனம் வழங்கிய ஸ்டிக்கர்களைப் பெறாத பயனாளர்கள், கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று, `WhatsApp Diwali stickers' என்று தேடி, வேறொரு செயலியைப் பதிவிறக்கம் செய்தும் ஸ்டிக்கர்களைப் பெற்றுக் கொள்ளலாம்.