மேலும் அறிய

Whatsapp Update: வந்தாச்சு அடுத்த அப்டேட்! வாட்ஸ் அப்பில் இனி சாட்களுக்கு 'சீக்ரெட் பூட்டு’ போடலாம்...எப்படி தெரியுமா?

வாட்ஸ் அப் சாட்களை லாக் செய்யும் ’சீக்ரெட் கோட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது மெட்டா.

Whatsapp Update: வாட்ஸ் அப் சாட்களை லாக் செய்யும் ’சீக்ரெட் கோட்' என்ற புதிய அம்சத்தை  மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப்:

தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. 

புதிய வசதி:

அதன்படி, வாட்ஸ் அப்பில், 'சீக்ரெட் கோட்’ (Secret Code) என்ற புதிய ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குறிப்பிட்ட சாட்களை மட்டும்  பிங்கர்  பிரிண்ட், ஃபேஸ்லாக் பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்யும் வசதி இருக்கிறது. இந்த வசதி பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீக்ரெட் கோட் (Secret Code) என்ற ஆப்ஷனை வாட்ஸ்  அப் கொண்டு வந்து உள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் தங்கள் சாட்களை தனிப்பட்ட பாஸ்வோர்ட் மூலம் பாதுகாக்க முடியும். இந்த சீக்ரெட் கோட் அம்சம் பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. தற்போது, இந்த அம்சம் ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ஐஓஎஸ் பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எப்படி வேலை செய்யும்? 

முதலில், நாம் யாருடைய சாட்டை லாக் செய் வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த சாட்டில் சீக்ரெட் கோட் ஆப்ஷனுக்கு சென்று பாஸ்வேர்ட்டை பதிவிட்டு லாக் செய்துவிடலாம். அடுத்த முறை வாட்ஸ் அப் ஓபன் செய்யும்போது, Search Bar-ல் நாம் அந்த சீக்ரெட் கோட் பாஸ்வேர்ட்டைபோட்டால் மட்டுமே, நம்மால் குறிப்பிட்ட சாட்களுக்கு செல்ல முடியும். இந்த சீக்ரெட் கோடில், எண்கள், எமோஜிகள், வார்த்தைகள் என அனைத்தையும் சீக்ரெட் கோட்டாக வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் வந்த வசதி:

சமீபத்தில் சேனல்கள் எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சேனல்கள் என்பது  உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அனுப்ப உதவும் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும். பயனர்கள் தங்களின் தேவைகள் மற்றும் விருப்பத்தின் பேரில் பின்தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுக்க ஒருவித கோப்பகத்தை ( searchable directory ) வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்குகிறது. அதனை பயன்படுத்தி பொழுதுபோக்குகள், விளையாட்டுக் குழுக்கள், உள்ளூர் செய்திகள் போன்றவை தொடர்பான சேனல்களை விருப்பத்தின் பேரின் பயனாளர்கள் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget