WhatsApp: பெண்களின் நலனின் வாட்ஸ் அப்! மாதவிடாயை நினைவுகூற சூப்பர் வழி! இதைப்பண்ணுங்க போதும்!
மாதவிடாய் தொடர்பான அலர்ட் வசதியை வாட்ஸ் அப் கொடுக்கிறது.

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தளம் அவ்வப்போது சில அப்டேட்களை அளித்து வரும் நிலையில் பயனாளர்களின் வசதிக்கேற்ப எதிர்கால அப்டேட்டுகளையும் திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருந்தது. ஏற்கனவே செய்தியை நீக்குவது, ஸ்டேட்டஸில் ஒலி இல்லாமல் செய்வது, செய்திகளுக்கு ரியாக்ட் செய்வது, ஸ்டிக்கர்ஸ், கைரேகை என பல அப்டேட்டுகளை கடந்த காலங்களில் வழங்கியிருந்தது. இப்படி வாட்ஸ் அப்பில் பல அப்டேட்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும் தனிப்பட்ட சில விஷயங்களுக்கும் வாட்ஸ் அப்புடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா குறித்து தெரிந்துகொள்ளவும், கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யவும் அரசே குறிப்பிட்ட எண்ணைக்கொடுத்து பயனர்களுடன் நேரடியாக வாட்ஸ் அப்பில் இணைந்திருந்தது. அதுபோல தற்போது பெண்களுக்கு உதவும்விதமாக மாதவிடாய் தொடர்பான ட்ராக்கர் வசதியை வாட்ஸ் அப் கொடுக்கிறது. Sirona Hygiene என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த அலர்ட் வசதியை வாட்ஸ் அப் கொடுக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?
9718866644 என்ற நம்பரை உங்கள் செல்போனில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பின்னர் வாட்ஸ் அப்பில் சென்று அந்த நம்பருக்கு Hi என டைப்செய்து அனுப்ப வேண்டும். அதன்பின்னர் உங்களுக்கான ஆப்ஷன்கள் வரும் அதன்படி பாலோ செய்து நீங்கள் ட்ராக்கரை பின் தொடரலாம். பெண்கள் தங்களுடைய மாதவிடாய் தொடர்பான தகவல்களை அங்கே பதிவு செய்ய வேண்டும்.அதன்பின்னர் உங்கள் மாதவிடாயை சரியாக கணித்து உங்களுக்கு அலர்ட் கொடுக்கும். மாதவிடாய் நேரத்தில் கர்ப்பம் தொடர்பான தகவல்களை வழங்குவது போன்ற ஆப்ஷன்களும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். உங்களது மாதவிடாய் தேதி மாறினால் அதற்கேற்ப எடிட் செய்து மீண்டும் பதிவேற்றிக்கொள்ளலாம்.
முந்தைய அப்டேட்டுகள்
பயனாளர்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதால் இந்த அப்டேட்டுகள் கவனத்துடன் கையாளப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் பல அப்டேட்டுகள் வெளியானது. அதன்படி ஏற்கனவே வாட்ஸ்அப் குரூப்களில் அதிகப்பட்சமாக 256 உறுப்பினர்களை நேரடியாகவும், லிங்க் மூலமும் இணைக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. இந்த வசதி மாற்றப்பட்டு 512 ஆக இரட்டிப்பு செய்யப்பட்டது.
இதேபோல் வாட்ஸ்அப் செயலியில் ஆடியோ கால் பேசும் போது இதுவரை 8 நபர்கள் மட்டுமே ஒரே சமையத்தில் இணைக்க முடியும் என்ற நிலை இருந்தது. இது 32 ஆக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஃபைல்களை பகிரும் அளவும் அதிகரிக்கப்பட்டது. இதுவரை 100 எம்.பி. அளவிலான ஃபைல்களை மட்டுமே பகிர முடியும் என்ற நிலை மாற்றப்பட்டு தற்போது 2 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் சக போட்டி நிறுவனமான டெலிகிராம் குறுகிய காலத்தில் 1.5 ஜி.பி. அளவிலான ஃபைல்களை பகிரும் வசதியை தனது பயனாளர்களுக்கு வழங்கியிருந்ததே ஆகும்.
மேலும் வாட்ஸ் அப்பில் தகவல்களை டெலிட் செய்ததும் அதனை மீட்டெடுக்க முடியாத நிலை இருந்தது. அது அப்டேட் செய்யப்பட்டு undo என்ற ஆப்ஷன் ஸ்கீரினின் கீழ் பகுதியில் சில வினாடிகள் தோன்றும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





















