Whatsapp Account Ban: ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! அதிர்ச்சி காரணம் என்ன?
வாட்ஸ் ஆப் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத பயனர்களின் கணக்குகள் இவ்வாறு தடை செய்யப்பட்டு வருகின்றன.
Whatsapp Account Ban: வாட்ஸ் ஆப் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத பயனர்களின் கணக்குகள் இவ்வாறு தடை செய்யப்பட்டு வருகின்றன.
வாட்ஸ் அப்:
தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், வாட்ஸ்அப் அதன் பாதுகாப்பு விதிமுறைகள் கருதி மாதாமாதம் சந்தேகத்திற்குரிய கணக்குகளை தடை செய்து வருகிறது.
டிசம்பர் மாதத்தில் எத்தனை கணக்குகள் முடக்கம்?
இந்திய அரசின் தகவல்தொழில்நுட்ப சட்டத்துக்கும், வாட்ஸ் ஆப் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத பயனர்களின் கணக்குகள் இவ்வாறு தடைக்கு உள்ளாகி இருக்கின்றன. இது தவிர பயன்பாட்டில் இல்லாத கணக்குகளையும் வாட்ஸ் ஆப் தடை செய்துள்ளது. அது குறித்த தகவல்களை நிறுவனமே அதன் மாதாந்திர அறிக்கையில் வெளியிடுகிறது.
அதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கி உள்ளதாக வாட்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. நவம்பர் 1, 2023 முதல் நவம்பர் 31ஆம் தேதி வரை 71,96,000 வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 19,54,000 கணக்குள் பயனர்களிடம் இருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்னே தடை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வசதி:
சீக்ரெட் கோட்’ (Secret Code) என்ற புதிய ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குறிப்பிட்ட சாட்களை மட்டும் பிங்கர் பிரிண்ட், ஃபேஸ்லாக் பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்யும் வசதி இருக்கிறது. இந்த வசதி பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீக்ரெட் கோட் (Secret Code) என்ற ஆப்ஷனை வாட்ஸ் அப் கொண்டு வந்து உள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் தங்கள் சாட்களை தனிப்பட்ட பாஸ்வோர்ட் மூலம் பாதுகாக்க முடியும்.
இந்த சீக்ரெட் கோட் அம்சம் பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. தற்போது, இந்த அம்சம் ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க