இதையெல்லாம் செய்யாதீங்க...! நவம்பர் 2021ல் 17 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்ஆப்
அதே மாதத்தில் இந்தியாவில் இருந்து 602 புகார்களை WhatsApp பெற்றது என்றும் அவற்றில் 36 மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஐடி விதிகளுக்கு இணங்க நவம்பர் மாதத்தில் இந்தியாவில் 17,59,000 கணக்குகளை தடை செய்ததாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. அதே மாதத்தில் இந்தியாவில் இருந்து 602 புகார்களை WhatsApp பெற்றது என்றும் அவற்றில் 36 மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஐடி விதிகள் 2021 இன் படி, நவம்பர் மாதத்திற்கான எங்கள் ஆறாவது மாதாந்திர அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம். இந்த பயனர்-பாதுகாப்பு அறிக்கையில், எங்கள் மெசேஜிங் தளத்தில் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதில் ஒரு அங்கமாக, பயனர் புகார்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வாட்ஸ்அப்பின் சொந்த தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. சமீபத்திய மாதாந்திர அறிக்கையில் கைப்பற்றப்பட்டபடி, நவம்பர் மாதத்தில் 1.75 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை WhatsApp தடை செய்தது", என்று வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அக்டோபரில், இந்தியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தளம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. "பல ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பம், தரவு விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் மற்றும் செயல்முறைகளில், எங்கள் தளத்தில் எங்கள் பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்துள்ளோம், எங்கள் பணியில் அதிக வெளிப்படைத்தன்மையை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருவோம், மேலும் எங்கள் முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களை எதிர்கால அறிக்கைகளில் சேர்ப்போம்" என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு யூஸரும் அதன் “சேவை விதிமுறைகளை” மீறுவதைக் கண்டறிந்தால், அக்கவுண்ட்கள் தடை செய்யப்படும் என்று whatsApp தெளிவாக கூறுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளும் பெருகி வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் , ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபலமான சமூக ஊடகங்களில் பல்வேறு போலியான செய்திகளை பலர் பரப்பி வருகின்றனர். பிறர் பகிரும் செய்திகளை உண்மை என நம்பி அதை பல லட்சம் பேர் அப்படியே ஷேர் செய்து வருகின்றனர். இது போன்ற போலியான, வதந்திகளை பரப்ப ஏராளமான போலி அக்கவுண்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது எல்லா வகையான சமூக ஊடகங்களிலும் இருந்து வருகிறது. இருப்பினும் உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப்பில், இந்த போலி அக்கவுண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகை போலி அக்கவுண்ட்களை கொண்டு மக்கள் மத்தியில் தவறான செய்திகள், வதந்ததிகள், மோசமான வீடியோக்கள், புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட அக்கவுண்ட்களை வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது முடக்குகிறது. வாட்ஸ்அப்பின் “சேவை விதிமுறைகளின்” (Terms of Service) படி, கீழ்காணும் விஷயங்களை செய்வது உங்கள் whatsApp அக்கவுண்ட்டைதடை செய்ய நிறுவனத்தை தூண்டலாம். மேலும் சில குற்றங்களுக்காக, கைதுகள் உட்பட சட்ட நடவடிக்கைகள் எடுக்க வசதியாக யூஸரின் மெட்டா டேட்டாவை கூட நிறுவனம் காவல்துறைக்கு வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
WhatsApp ஆள்மாறாட்டத்திற்கு எதிரான தெளிவான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. நீங்கள் வேறொருவருக்காக ஒரு கணக்கை உருவாக்கி “யாரோ ஒருவருக்காக ஆள்மாறாட்டம் செய்தீர்கள்” என்பது உறுதியானால் அந்த WhatsApp அக்கவுண்ட் தடைசெய்யப்படும் என்று நிறுவனத்தின் Terms of Service-ல் கூறப்பட்டுள்ளது. உங்கள் contact list-ல் இல்லாத ஒரு நபருக்கு நீங்கள் தொடர்ந்து அதிகமாக மெசேஜ்களை அனுப்பினால், WhatsApp உங்களை தடை செய்யலாம். WhatsApp Delta, GBWhatsApp, WhatsApp Plus போன்ற தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்களை பயன்படுத்தினால் நீங்கள் WhatsApp-ல் இருந்து நிரந்தரமாக தடை செய்யப்படலாம். தனியுரிமை பாலிசி காரணமாக மேற்கண்ட தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்கள் மூலம் தொடர்பு கொள்வதற்கு WhatsApp அனுமதிப்பதில்லை. எனவே எப்போதும் அதிகாரபூர்வ WhatsApp App-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பல யூஸர்கள் உங்களை block, அவர்கள் உங்கள் கான்டேக்ட் லிஸ்ட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், WhatsApp உங்களைத் தடை செய்ய கூடும். ஏனென்றால் பல யூஸர்கள் உங்களை block செய்யும் போது உங்கள் அக்கவுண்ட்டை ஸ்பேம் மெசேஜஸ் அல்லது போலி செய்திகளின் சோர்ஸாக WhatsApp கருதலாம். உங்கள் WhatsApp அக்கவுண்டிற்கு எதிராக பலர் புகார் அளிக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் உங்களை தடை செய்யலாம். ஆண்ட்ராய்டு ஃபோன்களில் APK ஃபைல்ஸ் வடிவில் மால்வேரை அனுப்பினால் அல்லது பிற யூஸர்களுக்கு ஆபத்தான phishing links-களை அனுப்பினால் WhatsApp உங்கள் அக்கவுண்ட்டை தடை செய்யலாம். ஒருவரை துன்புறுத்த அல்லது வெறுப்பு செய்திகளை பரப்ப எங்கள் தளத்தை பயன்படுத்துவதிலிருந்து விலகி இருங்கள் என்று வாட்ஸ்அப் தெளிவாக எச்சரித்துள்ளது. எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் அக்கவுண்ட் தடை செய்யப்படும் என வாட்ஸ்அப் கூறி உள்ளது.