அக்டோபரை முந்தும் நவம்பர்: இந்தியாவில் 37.16 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! காரணம் என்ன?
நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 37.16 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட யூசர்களைக் கொண்ட டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மாதமும் இணைய அறிக்கையை வெளியிட வேண்டும்.
நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 37.16 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட யூசர்களைக் கொண்ட டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மாதமும் இணைய அறிக்கையை வெளியிட வேண்டும்.
இதன்படி, மாதம் தோறும் வாட்ஸ் அப் இந்தியா நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்படும் கணக்குகளை முடக்கி அதன் புள்ளி விவரங்கள் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 37.16 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகளை நிறுவனம் முடக்கியுள்ளது.
ஆனால் இந்த 37 லட்சம் கணக்குகளில், 10 லட்சம் கணக்குகள் வாட்ஸ் ப் நிறுவனம் தாமாகவே முடக்கியுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், இந்த 10 லட்சம் கணக்குகளும் தனது சொந்த கண்காணிப்பின் அடிப்படையில் எவ்வித புகாரும் இன்றி முடக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசின் 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக முடக்கப்பட்டுள்ளன.
இந்த கணக்குகள் கடந்த அக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதம் முடக்கப்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 23.24 லட்சம் வாடஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டன. நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. மாதாமாதம் இந்த ஒழுங்கு நடவடிக்கையானது தொடர்ந்து நடைபெறுகிறது.
அதேபோல், வாட்ஸ் அப் பயனர்கள் அந்நிறுவனத்திற்கு அளித்த புகாரின் பெயரிலும் பல கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் தான் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 946 புகார்கள் பதிவாகியுள்ளதாக வாட்ஸ் அப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 830 கணக்குகளை முடக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. புகாரின் பேரில் கோரிக்கையை ஆராய்ந்து பார்த்து வாட்ஸ் அப் நிறுவனம் 73 அக்கவுன்டகளை முடக்கியுள்ளது.
வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு விதிமுறைகளை யாரேனும் தொல்லை தரும் பட்சத்தில் அவர்கள் புகார் அளிக்கலாம். முறையான அங்கீகாரம் பெறாமல் ஒரே நேரத்தில் ஸ்பாம் செய்திகளை அனுப்பக்கூடிய கணக்குகள், சாதி, மத, இன மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்துபவையாக இருக்கும் கணக்குகள், பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கும் கணக்குகள் ஆகியவை தடை செய்யப்படும்.
முறைகேடான அல்லது ஸ்பாம் கணக்கு என்று அறிந்த கணக்குகள் பற்றிய புகாரை grievance_officer_wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். மேலும், வாட்ஸ்அப் ஒரு உதவி மையத்தை உருவாக்கியுள்ளது. அதில் யூசர்கள் தங்கள் சந்தேகங்களை முன்வைக்கலாம். மேலும், இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் கிரீவன்ஸ் சென்டருக்கு தங்கள் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் புகார்களை கடிதம் மூலமாக அனுப்பலாம்.
ஒரு குறிப்பிட்ட வாட்ஸ்அப் கணக்கைப் பற்றி புகார் அளிக்கும் போது, அந்த எண்ணின் நாட்டின் குறியீடுடன் அனுப்ப வேண்டும். உதாரணமாக இந்திய வாட்ஸ்அப் எண்ணை புகார் அளித்தால், +91 என்பதை சேர்க்க வேண்டும்.