WhatsApp Feature: வாட்ஸ் அப்பில் தேவையில்லாத கால் வருதா..? இனி ஈசியா அவாய்ட் பண்ணலாம்..! எப்படி?
தேவையில்லாத அழைப்புகளை மியூட்டில் வைக்கும் வகையில் புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Whats app Feature : தேவையில்லாத அழைப்புகளை மியூட்டில் வைக்கும் வகையில் புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்-அப் செயலி
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய வசதி
இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் புதிய அப்டேட்டை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தேவையில்லாத அழைப்புகளை மியூட்டில் வைக்கும் வகையில் புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் அப்பில் தெரியாத நபர்கள் அழைப்பு வருவது என்பது அனைவருக்கும் நடக்கக் கூடிய ஒன்று. தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்பு வருவதை தடுக்கும் விதமாக வாட்ஸ் அப் புதிய அப்டேட்டை விரைவில் வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான அப்டேட் என்னவென்றால், தெரியாத நம்பர்களோ அல்லது விருப்பப்படாத நம்பர்களில் இருந்து அழைப்பு வந்தால் அதனை மியூட் செய்வதற்கான வசதி புதிய அப்டேட்டாக வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Chat-க்கு மட்டும் மியூட் (mute) வசதி இருந்து வந்த நிலையில், தற்போது அழைப்புகளுக்கு இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அண்மையில் வந்த அப்டேட்
ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றொரு நபருக்கு அனுப்பும்போது, அதில் கேப்ஷன் சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யவும் புதிய அப்டேட்டில் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதோடு சிறப்பம்சமாக டாகுமெண்ட்களை பகிரும்போது இனி கேப்ஷனை சேர்க்க முடியும். இதன்படி, செய்திதாள்கள், வர்க் டாகுமெண்ட்ஸ் ஆகியவற்ரை பகிரும்போதும் இனி கேப்ஷனை சேர்க்கலாம். இந்த புதிய அப்டேட்கள் படிப்படியாக பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க