மேலும் அறிய

உலகின் மிகப்பெரிய  உலக மொபைல் மாநாடு.! 6ஜி, ஏஐ குறித்த ஆராய்ச்சியில் மத்திய அரசு..!

உலக மொபைல் மாநாடு புதுமைகளை விரைவுபடுத்துவதற்கும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக மொபைல் மாநாடு :

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் மார்ச் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை வரை நடைபெறவுள்ள  உலகின் மிகப்பெரிய  உலக மொபைல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடானது மிகவும் செல்வாக்குமிக்க தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.    இந்தியா சார்பில் உலக மொபைல் மாநாடு- 2025 -ல்,  மத்திய தொலைத்தொடர்புத் துறை  அமைச்சர்  ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொள்கிறார்.இந்தியா மொபைல் மாநாடு- 2025- ன் முன்னோட்ட நிகழ்ச்சியை அவர் வெளியிடுவதுடன், உலக மொபைல் மாநாட்டில் இந்தியாவின் அரங்கையும்  திறந்து வைக்க உள்ளார்.

இந்தியா மொபைல் மாநாடு என்பது இந்தியாவின் கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை முன்னிலைப்படுத்தும் தளமாகும். மேலும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் அதிநவீன முன்னேற்றங்கள் மற்றும் நிலையான தீர்வுகளை இதில் காட்சிப்படுத்துகின்றனர். இந்திய அரங்கில் 38 இந்திய தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தியாளர்கள் தங்களின் அதிநவீன தயாரிப்புகளான வன்பொருள், மென்பொருள் ஆகிய இரண்டையும் காட்சிப்படுத்துவார்கள்.

இதுகுறித்து மத்திய சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது , “ அமைச்சரின் பங்கேற்பானது டிஜிட்டல் மற்றும் மொபைல் சூழல் அமைப்பில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக் காட்டுகிறது. அவரது பங்கேற்பு டிஜிட்டல் மாற்றம், புத்தாக்கம், தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும்.

Also Read: Trump Zelensky: என்ன நடந்திட்டிருக்கு இங்க.! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோட் சூட் அணியாததுதான் பிரச்னையா .!

6ஜி-ஏஐ ஆராய்ச்சி:

5ஜி, செயற்கை நுண்ணறிவு, 6ஜி, குவாண்டம் மற்றும் அடுத்த தலைமுறை மொபைல் தொழில்நுட்பங்களில் அதிநவீன முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, தமது பயணத்தின் போது, தொலைத்தொடர்பு அமைச்சர், உலகளாவிய தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுடன் உரையாடுவார். இந்த நிகழ்வு மொபைல் துறையை வடிவமைக்கும் முக்கிய போக்குகளை விவாதிப்பதற்கான ஒரு தளமாகச் செயல்படுவதுடன், இந்தியாவின் டிஜிட்டல் விருப்பங்களை நிறைவேற்றும்.


உலகின் மிகப்பெரிய  உலக மொபைல் மாநாடு.! 6ஜி, ஏஐ குறித்த ஆராய்ச்சியில் மத்திய அரசு..!

அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தமது பயணம் குறித்து,  “இந்தியா வேகமாக உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உருவாகி வருகிறது. மேலும் உலக மொபைல் மாநாடு போன்ற நிகழ்வுகளில் சர்வதேச கூட்டாளர்களுடனான எங்கள் ஈடுபாடு புதுமைகளை விரைவுபடுத்துவதற்கும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானது. உலகளாவிய நிபுணர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், மொபைல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி விவாதிப்பதற்கும் நான் எதிர்நோக்குகிறேன்’’ என்று தெரிவித்தார்.

அறிவு பரிமாற்றம்:

‘உலகளாவிய தொழில்நுட்ப நிர்வாகம்’,  ‘புதுமை மற்றும் ஒழுங்குமுறையை சமநிலைப்படுத்துதல்: தொலைத்தொடர்பு கொள்கை மீதான உலகளாவிய பார்வைகள்’ உள்ளிட்ட பல முக்கிய அமர்வுகளில் அமைச்சர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்சிலோனாவில் நடக்கும்  உலக மொபைல்  காங்கிரஸ் 2025-ல் பங்கேற்பது, உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட நிர்வாகிகள், தொலைநோக்கு பார்வையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது உத்திசார் ஒத்துழைப்பு, அறிவு பரிமாற்றம் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்பத் தலைமையை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!
விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
BSNL free data : வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு
வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget