மேலும் அறிய

BSNL free data : வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி BSNL மூலம் FREEDOM 2.0 திட்டத்தில் 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால் வசதியுடன் கூடிய ஒரு ரூபாய்க்கு ஒரு 4G வசதி சிம் கார்டு விற்பனை தொடக்கப்பட்டுள்ளதாக BSNL அறிவித்துள்ளது.

BSNL அசத்தல் ஆஃபர்

நவீன காலத்தில் இணையதளம் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை நீடித்து வரும் நிலையில், உள்ளங்கைக்குள் உலகம் என்ற அளவில் கையில் உள்ள போன் மூலம் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த ஒரு பொருளையும் வாங்க முடியும். அந்த அளவிற்கு இணையதள வசதி வளர்ந்துள்ளது. இந்த நிலையில் ஏர்டெல், ஜியோ என பல நிறுவனங்கள் போட்டி போட்டு பல சலுகைகளை அளித்து வரும் நிலையில், இதற்கு டப் கொடுக்க களத்தில் இறங்கியுள்ளது BSNL. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL மூலம் FREEDOM 2.0 திட்டத்தில் 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால் வசதியுடன் கூடிய ஒரு  ரூபாய்க்கு ஒரு 4G வசதி சிம் கார்டு விற்பனை தொடக்கப்பட்டுள்ளது.

BSNL இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால்

இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள BSNL அலுவலகத்தில்  முதன்மை பொதுமேலாளர் லோகநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்  மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை BSNL வர்த்தகப் பகுதியில் 4G சிம் விற்பனை அதிகரித்ததன் மூலமாக வருமானம் 12% அதிகரித்துள்ளது. 4G சிம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மதுரை BSNL மூலமாக FREEDOM 2.0 திட்டத்தில் 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால் , 100 SMS வசதியுடன் கூடிய ஒரு  ரூபாய்க்கு ஒரு 4G வசதி சிம் கார்டு விற்பனையானது செப்டம்பர் 12 ஆம் தேதி்வரை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். 

BSNL மதுரை வர்த்தக பகுதியில் BSNL 990 இடங்களில் தனது சொந்த 990 மொபைல் டவர்கள் , 34 USO மொபைல் டவர்கள் என 1,014 மொபைல் டவர்கள் மூலமாக 4G நெட்வொர்க் வழங்கப்பட்டுவருவதாக குறிப்பிட்டார். இதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் மற்றும் காரைக்குடி ஆகியவற்றில் இதுவரை டவர்கள் இல்லாத பகுதிகளில் 34 டவர்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் கொடைக்கானல் ஆகியவற்றில் கூடுதலாக 28 டவர்களில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

BSNL சேட்டிலைட் போன்

இது மட்டுமில்லாமல் இயற்கை பேரிடர் காலங்களில் கடற்கரை மற்றும் வனப்பகுதிகள் ஆகியவற்றில் தொலை தொடர்பு இல்லாத நேரங்களில் பயன்படுத்தும் வகையில்  BSNL  நிறுவனம் முதன்முறையாக BSNL சேட்டிலைட் போன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார். இதில் அரசு பயன்பாட்டுக்கு, தனியார் பயன்பாட்டுக்கு கட்டணம் வித்தியாசத்துடன் விற்பனை செய்யப்படுவதாக  BSNL  தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

BSNL free data : வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு
வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget