Serial Muthazhagu: முத்தழகு கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்...ஆடிப்போன அஞ்சலி...பூமி யார் பக்கம்?
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அஞ்சலி பூமிக்காக ஏகப்பட்ட கிஃப்ட்களை வாங்கி அவருக்கு பிறந்தநாள் பரிசளிக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலில் ஹீரோ பூமிக்கு அவரது இரு மனைவிகளும் பிறந்தநாள் கிஃப்ட் கொடுப்பதாக காட்டப்படும் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலில்கதைப்படி சீரியலின் ஹீரோ பூமி இரண்டு பொண்டாட்டிக்காரர். அவர் இரண்டு ஹீரோயின்களில் ஒருவரான முத்தழகை தான் முறைப்படி காதலித்து வருகிறார். அவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் திடீரென அங்கு வரும் அஞ்சலி தாலியை எடுத்துக் காட்டி, முத்தழகு உன் மனைவி என்றால் அப்ப நான் யார் என கேள்வியெழுப்ப பூமி இரண்டு பொண்டாட்டிக்காரர் குட்டு உடைகிறது. முன்னதாக மருத்துவமனையில் அஞ்சலி உடல்நிலை முடியாமல் இருந்தபோது ஆறுதலுக்காக அவருக்கு துணையாக இருப்பதற்காக பூமி அஞ்சலிக்கு தாலி கட்டி இருப்பார்.
அதன்பிறகு நடந்த பஞ்சாயத்தில் இருவரும் முறைப்படி பூமியுடன் வாழ வேண்டும் என கூறப்பட்ட இருவரையும் அவர் எப்படி சமாளிக்கிறார் என காட்சிகள் கலகலப்பாக வைக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம் பெறும் காட்சிகள் போன்றே இதிலும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் இரு மனைவியையும் பூமி எப்படி சமாளிக்கிறார் என்ற காட்சிகளுடன் சீரியல் செல்வதால் பலரும் இதனை விரும்பி பார்க்கின்றனர்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஹீரோ பூமிக்கு பிறந்தநாள் என்பதால் அஞ்சலி இரவு 12 மணிக்கு வீட்டு மாடியில் வைத்து குடும்ப உறுப்பினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுகிறார். அப்போது பூமி கேக்கை எடுத்து தனது அம்மாவுக்கு கொடுக்க திருமண விஷயத்தில் ஏற்பட்ட கோபத்தில் பேசாமல் இருக்கும் அவர் அதனை வாங்க மறுக்கிறார். பின்னர் அனைவரும் வாழ்த்து சொல்லி விட்டு கீழே சென்ற நிலையில் தனக்கு பிறந்தநாள் என தெரியாது என்றும், நான் உங்களுக்கு எல்லோரும் சொல்வது போல சரியானவள் இல்லை என்றும் கூறி முத்தழகுன் வருத்தப்பட, அவரை பூமி சமாதானம் செய்கிறார்.
மறுநாள் காலை வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் பூமிக்கு வாழ்த்து சொன்ன நிலையில் அவரது அம்மா கோவிலில் அர்ச்சனை, அன்னதானம் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்கிறார். அப்போது பூமிக்கு முத்தழகு ஏதோ ஒரு கிஃப்ட் தயார் செய்து வைத்துள்ளது தெரிய வருகிறது. அதனை அவரிடம் கொடுக்க முத்தழகு ரூமுக்குள் செல்கிறார். அந்நேரம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அஞ்சலி பூமிக்காக ஏகப்பட்ட கிஃப்ட்களை வாங்கி அவருக்கு பிறந்தநாள் பரிசளிக்கிறார். இதைப் பார்த்து பூமி மகிழ்ச்சியடைந்த நிலையில் முத்தழகு தானும் தனக்கு தெரிந்த மாதிரி கிஃப்ட் கொண்டு வந்ததாக கூறுகிறார்.
பின் தன் உள்ளங்கையை காட்ட அதில் இருக்கும் ஒரு அரிசியில் பூமிநாதன் என அவர் பெயர் எழுதப்பட்டிருந்தது. தான் இதனை எழுதியதாகவும், இந்த அரிசி தங்கள் வயலில் விளைந்ததாகவும் முத்தழகு கூற அதனைக் கேட்டு பூமி ஆச்சரியப்படுகிறார். இதனைப் பார்த்த அஞ்சலி, பூமி முத்தழகு பக்கம் சாய்ந்து விட்டதாக நினைப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைந்தது. பிறந்தநாளுக்கே இப்படி இருவரும் அடித்துக் கொள்கிறார் என்றால் பூமியுடன் வாழ இருவரும் என்னென்ன போட்டி போடுவார்களோ என ரசிகர்கள் ஆவலுடன் வரும் நாட்களில் ஒளிபரப்பாகவுள்ள எபிசோட்டை காணவ ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்