Top 5 Health and Fitness App: ஃபிட்னஸ் ஆப் எது பயன்படுத்தணும்னு ஐடியா இல்லையா? இங்கே இருக்கு பெஸ்ட் ஆப்ஸ்..
இங்கு டாப் 5 பெஸ்ட் ஃபிட்னஸ் மற்றும் உடல்நல செயலிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் அவர்களது தேவைக்கு ஏற்றார்போல ஆப்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
எல்லாவற்றிற்கும் ஆப் வந்துவிட்ட காலத்தில், நம் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை கணிப்பதற்கு பல ஆண்டுகளாக நிறைய ஆப்கள் நமக்கு கூகுள் பிளே ஸ்டோரிலும் ஐஒஎஸ் ஸ்டோரிலும் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் அதன் தனித் தனி சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. நாம் என்னென்ன உட்கொண்டுள்ளோம் என்பதை வைத்து எவ்வளவு விட்டமின், எவ்வளவு எனர்ஜி, எவ்வளவு எடை, எவ்வளவு கலோரிகள் நம் உடலில் சேர்ந்துள்ளது என்பதனை துல்லியமாக கணக்கில் வைத்துக்கொள்வதற்கென்று பல ஆப்கள் நமக்கு கிடைக்கின்றன. அது மட்டுமின்றி நாம் செய்யும் உடற்பயிற்சி மூலம் எவ்வளவு கலோரிகள் குறைந்துள்ளன, எவ்வளவு நேரம், என்ன வகையான உடற்பயிற்சி செய்துள்ளோம் போன்றவற்றையும் டேட்டா எடுத்து வைத்துக்கொள்கிறன. இது போன்ற ஆப்கள் நமக்கு எண்ணிலடங்கா எண்ணிக்கையில் கிடைக்கின்றன என்பதால் பலருக்கும் எதைப் பயன்படுத்துவது என்பதில் சந்தேகங்கள் இருக்கும். இங்கு டாப் 5 பெஸ்ட் ஃபிட்னஸ் மற்றும் உடல்நல செயலிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் அவர்களது தேவைக்கு ஏற்றார்போல ஆப்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
கூகுள் ஃபிட்
கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான செயலிதான் கூகுள் ஃபிட். இந்த செயலியில் இருக்கும் ஒர்க் அவுட் டிராக்கர் சிறந்த வகையில் இருக்கிறது. பயன்படுத்துபவர்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் உங்களின் உடல் செயல்பாட்டின் வேகம், உயரம், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி உள்ளிட்டவைகள் உடனுக்குடன் இந்த செயலியில் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. உடற்பயிற்சி மூலம் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.
டெய்லி யோகா
தினசரி யோகா செய்பவர்களுக்கு இந்த செயலி மிகவும் உதவிகரமாக இருக்கிறது. டெய்லி யோகா ஆப்பை பதிவிறக்கம் செய்து அவற்றில் வரும் தினசரி குறிப்புகளை பயன்படுத்தலாம். யோகா செய்ய தொடங்கும் நேரம் முதல் முடிக்கும் வரையிலான நேரத்தை இதன்மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம். இதில் இருக்கும் வாய்ஸ் கிளிப், பயன்படுத்துபவர்களை எப்படி யோகா செய்யவேண்டும் என்பதை டைரக்ஷனும் செய்யும் என்பது கூடுதல் சிறப்பு.
ஜெஃபிட்
மிகச்சிறந்த பிட்னஸ் டிராக்கர் செயலிகளில் இதுவும் ஒன்று. தனிநபர்களுக்கு மட்டுமில்லாமல், பிட்னஸ் பயிற்சியாளர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். ஜெஃபிட் ஒர்க் அவுட் டிராக்கரில் மட்டும் சுமார் 1300 க்கும் மேற்பட்ட பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை ஜிம் டிரெயினர் இல்லாமல் கூட, நீங்களே கற்றுக்கொள்ளும் வகையிலான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Healthify Me
இந்த ஆப்பை அடிக்கடி விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள், பயன்படுத்துபவர்களின் உடற்பயிற்சி இலக்குகளை எட்டுவதற்கும், அதனை தினசரி கண்காணித்து ரிமைன்ட் செய்யவும் சரியான ஒரு ஆப்பாக இது திகழ்கிறது. எடை அதிகரிப்பு, எடை இழப்பு, நீங்கள் அருந்தும் தண்ணீரின் அளவு, உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு, சாப்பாட்டின் அளவு, தூக்கத்தின் நேரம் உள்ளிட்டவைகளை அப்டூ டேட்டாக, தகவல்களை சேமித்து வைக்கிறது. மேலும், எந்த உபகரணங்கள் தேவைப்படாத ஒர்க்அவுட் பயிற்சிகளும், அதற்கான வீடியோக்களும் இந்த செயலியில் கிடைக்கிறது.
My Fitness Pal
உடல் பருமனால் அவதிப்பட்டு, அதனை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருபவர்களுக்கு இந்த ஆப் சரியான ஒன்றாக இருக்கும். நீங்கள் எதை சாப்பிட வேண்டும், எதனை சாப்பிடக்கூடாது உள்ளிட்ட தகவல்களைக் கூட தெரிவிக்கிறது. 6 மில்லியன்களுக்கும் மேலான உணவுப் பொருட்களின் டேட்டா இந்த செயலியில் உள்ளது என்பது இதன் ஸ்பெஷல்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )