மேலும் அறிய

UPI: யு.பி.ஐ. பரிவர்த்தனை மேம்பாட்டிற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி..விவரம்

UPI:  இணையசேவை இல்லாமல் யு.பி.ஐ. (UPI) மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இணையசேவை இல்லாமல் யு.பி.ஐ. (UPI) மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிநிலை கொள்கை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (10/08/2023) நடைபெற்ற நிதிநிலை கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனை குறித்து மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 

 யு.பி.ஐ. (Unified Payments Interface (UPI)) பணப்பரிவர்த்தனை முறை நாடு முழுவதும் மிகவும் பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றிற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் (artificial intelligence system.) அதாவது ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  உரையாடல் மூலம் (natural language conversations) பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) இந்த புதிய நடைமுறைக்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் இந்த புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ. உரையாடல் மூலம் பணப்பரிவர்த்தனை பாதுகாப்பானதாக அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, யு.பி.ஐ. லைட் (UPI Lite) மூலம் Near Field Communication (NFC) தொழில்நுட்பத்தை பயனாளர்கள் பயன்பெற முடியும். இணையதள் சேவை இல்லாதாக பகுதிகளிலும் மோசமான இணைய சேவை உள்ள இடங்களிலும் இந்த நியர் ஃப்ல்டு கம்யூனிகேசன் முறையை பயன்படுத்திகொள்ளலாம்.

பணப்பரிவர்த்தனை தோல்வியடைவதை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இணையசேவை இல்லாமல் யு.பி.ஐ. (UPI) மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

யு.பி.ஐ. லைட் மூலம் நாள் ஒன்றுக்கு பின்கோட் இல்லாமல் ரூ.500 பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதன் குறைந்தபட்ச பேலன்ஸ் ரூ.2,000 மாற்றமின்றி தொடர்கிறது. 

பேடி எம்., BHIM, கூகுள் பே ஆகியவற்றில் யு.பி.ஐ. லைட் உள்ளது. கனரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி., இந்தியன் வங்கி, கோடாக் மகேந்திரா வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் யு.பி.ஐ. லைட் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Near Field Communication தொழில்நுட்பம் மூலம் யு.பி.ஐ பயன்படுத்தும் நடைமுறை இணையதள சேவை இல்லாமல் அதிவேகத்தில் பணபரிமாற்றம் மேற்கொள்ள வசதியாக இருக்கும். 

ரெப்போ விகிதம் தற்போதுள்ள 6.50 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (10/08/2023) நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் பேசியவர்,” தக்காளி போன்ற காய்கறிகள், தானியங்கள், பருப்பு விலை உயர்ந்துள்ளது. நாட்டில் சில்லறை பணவிக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை” என்று தெரிவித்தார் 

மேலும், நாட்டின் பொருளாதாரம் நிலையான வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலக வளர்ச்சிக்கு 15 சதவீதம் பங்களிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.  2,000 நோட்டுகளில் 87% திரும்பபெறப்பட்டுவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Embed widget