Technology: உங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான இன்டர்நெட் வழங்குவது எப்படி..? இதைப்படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!
அனைத்து வயதினருக்குமான தகவல்கள் அங்கே கிடக்கின்றன. ஆனால் பெரியவர்கள் போல பிள்ளைகளால் அதனை பாதுகாப்பாக அனுகமுடிகிறதா என்றால் இல்லை.
நமக்குத் தேவையான அனைத்து வகையான தகவலையும் பெறக்கூடிய ஒரே இடம் இணையம் மட்டுமே. இது நம் வாழ்க்கையை கணிசமான அளவு வசதியாக மாற்றியுள்ளது என்றால் அது மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரத்தில் சைபர் குற்றங்களின் ஆபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இணையதள வசதி:
இன்டர்நெட்டை அனுகுவது தற்காலத்தில் அனைவருக்குமே வாடிக்கையானதாகிவிட்டது. அனைத்து வயதினருக்குமான தகவல்கள் அங்கே கிடக்கின்றன. ஆனால் பெரியவர்கள் போல பிள்ளைகளால் அதனை பாதுகாப்பாக அனுகமுடிகிறதா என்றால் இல்லை. சைபர் புல்லியிங், சைல்ட் பார்னோகிராபி என பிள்ளைகளை ஆபத்தில் தள்ளும் பல விவகாரங்கள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன. அதே சமயம் அதற்காக அவர்களது இண்டர்நெட் உரிமையை பறிக்க முடியாது. பாதுகாப்பான இண்டர்நெட் அணுகுதலுக்கு அவர்களுக்கு என்னென்ன பரிந்துரைக்கலாம்...?
வெளிப்படையான தொடர்பு
குழந்தைகளுடன் அவர்களின் ஆன்லைன் தொடர்புகளைப் பற்றி உரையாடலைத் தொடங்குவது முக்கியம். ஆன்லைனில் ஏதேனும் விரும்பத்தகாத நடத்தையை எதிர்கொண்டால் அவர்கள் உங்களிடம் தெரிவிக்கலாம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதை உறுதிசெய்யவும். குழந்தைகளும் மற்றவர்களுடன் பழகும் போது அன்பாகவும் அக்கறையுடனும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். தனியுரிமை மற்றும் அதைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும், அத்துடன் தவறான தகவல்கள் தவிர்த்து வயதுக்கு ஏற்ற உள்ளடக்கத்தை மட்டும் அவர்கள் அனுக வழிவகை செய்ய வேண்டும்
அடிப்படை விதிகளை அமைக்கவும்
உங்கள் குழந்தைகள் எப்போது, எங்கு, எப்படி இணையத்தைப் பயன்படுத்தலாம் என்பது தொடர்பான விதிகளை உருவாக்கவும். அவர்கள் பார்க்கும் தளங்களைக் கண்காணிப்பதற்கான அடிப்படை விதிகளை அமைக்கவும். அதே சமயம் உங்கள் பிள்ளைகள் மீதான நம்பகத்தன்மையை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும்.
அந்நிய தொழில்நுட்பம்
பாதுகாப்பற்ற உள்ளடக்கம் அல்லது பொருத்தமற்ற தொடர்புகளுக்கான தளமாக இருக்கும் தளங்களை உங்கள் குழந்தை அணுகுவதைத் தடுக்க, பேரண்டல் கண்ட்ரோல் கட்டுப்பாடுகளை நிறுவவும். உங்கள் பிள்ளையின் சாதனத்தில் வலுவான வைரஸ் பாதுகாப்பு நிறுவப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். பொருத்தமான தனியுரிமை அமைப்புகளையும் சரிபார்த்து வைக்கவும்.
உஷாராக இருங்கள்
உங்கள் குழந்தையின் தகவல்களைக் கேட்கும் தளங்களில் அதுகுறித்து பதிவுசெய்வது தொடர்பாக உஷாராக இருங்கள். ஆன்லைன் செயல்பாடுகளால் உங்கள் பிள்ளைகள் சைபர் புல்லியிங் போன்ற பாதிப்புகளால் தாக்கப்படுகிறாரா என்பதை எச்சரிகையுடன் கவனித்து வரவும்.
ஹெல்ப்லைன்
அவர்கள் பாதுகாப்பாக ஆன்லைனில் உலா வர ஹெல்ப்லைன் வசதிகள் அவர்களுக்காக இருக்கிறது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும். மேலும் நீங்கள் எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்பதையும் தெரியப்படுத்தவும்.