Jio 1 Rs Recharge Plan: ஒரு ரூபாய்க்கு இண்டர்நெட் ரீசார்ஜ்! புதிய அதிரடி ப்ளானை அறிமுகம் செய்த ஜியோ!
Jio 1 Rs Recharge Plan: ஜியோ புதிய ரீசார்ஜை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 1 ரூபாய்க்கு இந்த ரீசார்ஜ் கிடைக்கும்
தொலைதொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் ப்ளான்களை புதுப்பித்தன. முதலில் ஏர்டெல் விலை உயர்வை அறிவித்தது. பின்னர் வோடோபோன். கடைசியாக ஜியோவும் ரீசார்ஜ் ப்ளான்களை அதிகரித்தது. இந்நிலையில் தற்போது ஜியோ புதிய ரீசார்ஜை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 1 ரூபாயில் இந்த ரீசார்ஜ் அறிமுகப்படுத்தியுள்ளது.
என்ன ரீசார்ஜ்?
இந்த ஒரு ரூபாய் ரீசார்ஜ் 4ஜி டேட்டா மட்டுமே கிடைக்கப்பெறும் ப்ளான் ஆகும். இந்த ரீசார்ஜ் மூலம் கால்பேசும் வசதி ஏதும் கிடையாது. 100 MB இண்டர்நெட் கிடைக்கும் வகையில் இந்த ரீசார்ஜ் அறிமுகப்படுத்தியுள்ளது. 30 நாள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
எங்கு கிடைக்கும்?
இந்த ரூ.1 ரீசார்ஜ், நாம் வழக்கமாக ரீசார்ஜ் செய்யும் தளங்களில் கிடைக்காது. இந்த புதிய ரீசார்ஜ் My Jio appல் மட்டுமே கிடைக்கும். ஜியோ வெப்சைட்டில் கூட இல்லை. ஜியோவின் குறிப்பிட்ட செயலியில் மட்டுமே இந்த ரீசார்ஜ் ப்ளானை அந்நிறுவனம் கொடுத்துள்ளது. மிக அவசரமான மிகச்சிறிய இண்டர்நெட் தேவை என்றால் இந்த ரூ.1 ரீசார்ஜ் கைகொடுக்கும் எனத் தெரிகிறது.
சூரியனைத் தொட்ட நாசா விண்கலம்: வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய பெருமிதத்தில் நாசா விஞ்ஞானிகள்!
இதற்கிடையே, இந்தியாவின் 4ஜி நெட்வொர்க் வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களுள் அதிக சராசரி டேட்டா வேகத்தை வழங்குவதில் முதலிடம் பெற்றுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். கடந்த நவம்பர் மாதம், ரிலையன்ஸ் ஜியோ நொடிக்கு சுமார் 24.1 மெகாபிட் டவுன்லோட் வேகத்தை சராசரியாகக் கொண்டிருந்ததாக ட்ராய் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் வோடஃபோன் ஐடியா நிறுவனமும், பாரதி ஏர்டெல் நிறுவனமும் கடந்த நவம்பர் மாதத்தில் சராசரி 4ஜி டவுன்லோட் வேகத்தை அதிகரித்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில், ஜியோ நிறுவனத்தின் சராசரி டவுன்லோட் வேகத்தில் சுமார் 10 சதவிகிதம் வரை உயர்வு இருந்ததாகவும், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் டவுன்லோட் வேகம் சுமார் 8.9 சதவிகிதம் உயர்ந்துள்ளதையும்,. ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி டவுன்லோட் செய்தலின் வேகம் சுமார் 5.3 சதவிகிதம் உயர்ந்துள்ளதையும் ட்ராய் அமைப்பு பதிவு செய்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்