Realme 8S 5G Launch: அசத்தலான இரண்டு மாடல்களை அறிமுகம் செய்யப்போகும் ரியல்மி.. லீக்கான தகவல்கள்!
அதிகாரப்பூர்வமாக ரியல்மியின் புதிய மாடல்கள் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் சில தகவல்கள் கசிந்துள்ளன.
ரியல்மியின் அடுத்த மாடலான ரியல்மி 8 சீரிஸ் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. ரியல்மி தன்னுடைய 8 சீரிஸில் இரண்டு வகையான மாடல்களை வரும் 9ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளது. Realme 8s 5G மற்றும் Realme 8i ஆகிய மாடல்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில் ரியல்மி பேட், ரியல்மி பாக்கெட் ஸ்பீக்கர் உள்ளிட்ட தயாரிப்புகளையும் ரியல்மி இந்த வாரம் வெளியிடவுள்ளது. வரும் 9ம் தேதி மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள அறிமுக விழாவில் இந்த தயாரிப்புகள் அறிமுகமாவுள்ளன.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையான இந்த அறிமுக விழா ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது. வெளியாகவுள்ள போன் மாடல்கள் குறித்தோ, மற்ற தயாரிப்புகள் குறித்தோ வேறு எந்த தகவலும் வெளியாகமல் இருந்தது. இந்த நிலையில் ரியல்மி இந்தியாவின் சி இ ஓ மாதவ் சமீபத்தில் போன் மாடல் குறித்து ட்வீட் செய்திருந்தார். அதன்படி ரியல்மி 8i, 120Hz டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் இது குறித்து குறிப்பிட்டுள்ள அவர், இந்த விலை பட்ஜெட்டுக்குள் இந்த வகை டிஸ்பிளே realme8i மாடலில் மட்டுமே கிடைக்கிறது என்றார்.
அதிகாரப்பூர்வமாக ரியல்மியின் புதிய மாடல்கள் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் சில தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி ரியல்மி 8s 90Hz டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 5ஜி சப்போட்ட் செய்யும். 16மெகா பிக்ஸல் செல்பி கேமராவும், 64மெகா பிக்ஸல் கொண்ட பின்பக்க கேமரா செட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரியும், 30வாட்ஸ் சார்ஜரும் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. யுனிவர்ஸ் நீலம், யுனிவர்ஸ் பர்பிள் ஆகிய இரு வண்ணங்களில் இது கிடைக்கும். இந்த மாடல் 6GB + 128GB மற்றும் 8GB + 128GB ஆகிய இரண்டு ரேம் வகைகளில் இந்த மாடல் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி 8i மாடலை பொருத்தவரை 50மெகா பிக்ஸல் செட் கொண்ட பின்பக்க கேமரா, 16மெகா பிக்ஸல் கொண்ட செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5000 mAh பேட்டரியும், 18W அதிவேக சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் பிளாக், ஸ்பேஸ் பர்பிள் ஆகிய இரு வண்ணங்களில் இது கிடைக்குமென தெரிகிறது. இந்த மாடல் ரேம் மற்றும் மெமரிகளில் அடிப்படையில் 4GB + 64GB மற்றும் 6GB +128GB ஆகிய மாடல்களில் கிடைக்குமென தெரிகிறது. இந்த இரு மாடல்களின் விலை நிலவரம் எதுவும் வெளியாகவில்லை. வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள அறிமுகவிழாவில் விலை நிலவரங்கள் வெளியாகும்.
Our latest #realme8i is the only smartphone in this price segment that is equipped with 120Hz Ultra Smooth Display. It not only gives you a faster refresh rate but also sharper animations.
— Madhav Sheth (@MadhavSheth1) September 5, 2021
Gear up for an #InfinitelySmooth experience! pic.twitter.com/uxBP1Ejtzv