மேலும் அறிய

தனித்துவ சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ’OnePlus Nord 2' : சூப்பர் டூப்பர் அறிவிப்பு !

துல்லியமான மற்றும் ஹை குவாலிட்டி புகைப்படங்கள் எடுப்பதில் இது  முந்தைய ஒன் பிளஸில் இருந்து பயனாளர்களுக்கு  மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் குறைந்த நாட்களிலேயே பலரின் ஃபேவரைட்டாக மாறிப்போன நிறுவனம் “ஒன் ப்ளஸ் “ .மொபைல் விற்பனையில் ஒரே வருடத்தில் புதிய மைல் கல்லை பதித்தது ஒன் பிளஸ். இந்நிலையில் இந்தியாவில் தனது அடுத்த புதிய படைப்பை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஒன் பிளஸ் நோர்ட் 2 மொபைல் போன்கள் குறித்த வதந்திகள் வெளியாகின. இது இந்தியாவில் வெளியாகுமா வெளியாகாதா என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் ஒன் பிளஸ் ரசிகர்கள். இந்நிலையில் ட்ரைலர் ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம். இதன் மூலம் விரைவில் இந்தியாவிற்கு ஒன் பிளஸ் நோர்ட் 5ஜி மொபைல்போன்கள் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளன. 

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒன் பிளஸ் நோர்ட்  என்ற பெயரிலான மொபைல்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இது  4 ஜி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  இதனுடைய அடுத்த வெர்ஷனான ஒன் பிளஸ் நோர்ட் 2 ஆனது , 5 ஜி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன் பிளஸ் நோர்ட் 2  இல் ஏராளமான ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஷன்ஸ்  திறன்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. AI தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை எடுக்க முடியுமாம். குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் 2 , AI Photo Enhancement என்ற  ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  22 வெவ்வேறு புகைப்படக் காட்சிகளை அடையாளம் காணலாம், இதன் அடிப்படையில்  தானாகவே புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடத்திற்கு ஏற்ப வண்ணங்களை மாற்றியமைத்து அழகான  புகைப்படங்களை பதிவு செய்யுமாம். இதே வசதி வீடியோவிற்கு உள்ளது.


 ஒன்பிளஸ் ,  மீடியாடெக்குடன் இணைந்து டைமன்சிட்டி 1200-AI  என்ற புராசஸருடன் கூடிய  ஒன் பிளஸ் நோர்ட் 5ஜி  மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுவே  மீடியாடெக் புராசஸருடன்  வெளிவரும் முதல் ஒன் பிளஸ் மொபைல்போன் என்பது குறிப்பிடத்தகக்து. முன்னதாக மீடியா டெக் டைமன்சிட்டி 1200  புராசஸரானது ஆனது ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் போன்ற சில ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது. ஆனாலும் ஒன் பிளஸ்  நோர்ட் 2  மொபைல்போனுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் முந்தைய டைமன்சிட்டி 1200  புராசஸருக்கும் இதற்கும் நிறைய மாறுபாடுகள் இருக்குமென கூறப்படுகிறது.  

துல்லியமான மற்றும் ஹை குவாலிட்டி புகைப்படங்கள் எடுப்பதில் இது  முந்தைய ஒன் பிளஸில் இருந்து பயனாளர்களுக்கு  மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மிட் ரேன்ச் மொபைல் போனாக களமிறங்கவுள்ள ஒன் பிளஸ் நோர்ட் 2 5ஜி ஆனது, இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். முந்தையை ஒன் பிளஸ் மொபைல்கள் அறிமுகமானதைப்போலவே , இதுவும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam 2026 LIVE: இன்னும் சில மணி நேரங்களில் ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.. ABP NADU-இல் இணைந்திருங்கள்!
Tiruvannamalai Deepam 2026 LIVE: இன்னும் சில மணி நேரங்களில் ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.. ABP NADU-இல் இணைந்திருங்கள்!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam 2026 LIVE: இன்னும் சில மணி நேரங்களில் ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.. ABP NADU-இல் இணைந்திருங்கள்!
Tiruvannamalai Deepam 2026 LIVE: இன்னும் சில மணி நேரங்களில் ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.. ABP NADU-இல் இணைந்திருங்கள்!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
Embed widget