மேலும் அறிய

UPI Payment: வாய்ஸ் நோட் முதல் கடன் வரை: யுபிஐ செயலியில் வந்த அதிரடி மாற்றங்கள்...நோட் பண்ணிக்கோங்க!

யுபிஐ சேவைகளில் பயன்படுத்தப்படும் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வைத்தார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.

UPI Payment: யுபிஐ சேவைகளில் பயன்படுத்தப்படும் பல புதிய சேவைகளை  அறிமுகம் செய்து வைத்தார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.

டெல்லியில் நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் (Global Fintech) விழாவில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய பேமெண்ட் கழகத்தின் (National Payments Corporation of India) புதிய தயாரிப்புகளை சக்திகாந்த தாஸ் அறிமுகம் செய்து வைத்தார். யுபிஐ சேவைகளில் பயன்படுத்தப்படும் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வைத்தார்.  அதாவது, ஹலோ யுபிஐ,  யுபிஐ லைட் எக்ஸ், Near Field Communication, யுபிஐயில் லோன் எடுப்பது போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   

ஹலோ யுபிஐ (Hello UPI):

ஹலோ யுபிஐ என்ற ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் குரல் வழியாக பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் மூலமே யுபிஐ செயலிகளை பயன்படுத்த முடியும். இதனை ஆப்ஸ், டெலிகாம் அழைப்புகள் மற்றும் IoT சாதனங்கள் மூலம் குரல் வழியாக பணம் செலுத்த பயனர்கள் இந்த ஹலோ வசதி உதவுகிறது. இது விரைவில் பல பிராந்திய மொழிகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

லைட் எக்ஸ் (Lite X): 

யுபிஐயில் லைட் எக்ஸ் (Lite X) என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் இணைய வசதி இல்லாமல் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவசதி சீராக இருக்கும் பகுதிகளில்  இநத் லைட் எக்ஸ் வசதியை பயனர்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது Near Field Communication (NFC) என்ற தொழில்நுட்பம் மூலம் ஆப்லைனில் பணப் பரிவர்த்தனை செய்ய உதவுகிறது. 

கடன் பெறும் வசதி:

யுபிஐ வசதியில் ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, யுபிஐ செயலி மூலம் லோன் எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கடன் வாங்கும் வசதியை யுபிஐ செயலிகளுக்கு வழங்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

யுபிஐ பரிவர்த்தனை:

பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய வசதிதான் UPI (Unified Payments Interface). கடந்த 2016-ஆம் ஆண்டு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையைத் தொடங்கியது. தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகள் மூலம், டீக்கடை தொடங்கி நகைக்கடை வரையிலும் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றிற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. 

 டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்த யுபிஐ வசதி மூலம் கடந்த மாதம் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10 பில்லியனுக்கு அதிகமான பரிவர்த்தனைகள் செய்து யுபிஐ சாதனை படைத்துள்ளது.  இது கடந்த ஜூலை மாதத்தை காட்டிலும் 67 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget