மேலும் அறிய

Netflix Password: இனிமே இதெல்லாம் கிடையாது.. எப்படி? எங்க? நெட்பிளிக்ஸ் யூசர்களுக்கு வந்த ஷாக்கிங் அப்டேட்..

நெட்பிளிக்ஸ் செயலியின் பயனாளர்கள் பாஸ்வேர்டை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதை, தடுக்க அடுத்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடு விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ்:

உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. பிரத்யேகமாக பிரமாண்ட செலவில் தயாரிக்கப்பட்டு இந்த செயலியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. வருடம் மற்றும் மாதம் என பல்வேறு விதமான சந்தா திட்டங்களை பயன்படுத்தி, நெட்பிளிக்ஸில் வெளியாகும் வீடியோக்களை பயனாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

பாஸ்வேர்டை பகிரும் பிரச்னை:

அவ்வாறு சந்தா செலுத்தி கோடிக்கணக்கான பயனாளர்கள் வீடியோக்களை பார்த்தாலும், பயனாளரின் பாஸ்வேர்டை பயன்படுத்தி மற்றவர்கள் தங்களது சாதனங்களில் சந்தா செலுத்தியவரின் கணக்கு மூலமாக வீடியோக்களை பார்ப்பது நெட்பிளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே கணக்கிற்கு இரண்டு பேர் சேர்ந்து சந்தா செலுத்தி அதனை பயன்படுத்துவது என பல்வேறு வகையில், ஒரே நெட்பிளிக்ஸ் கணக்கு பலரால் பகிர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் 10 கோடிக்கும் அதிகமானோர் நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டாலும், தொடர்ந்து சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், இந்த பிரச்னையை பெரிதாக கருத்தில் கொள்ளாமல் இருந்தது. ஆனால், நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகள் காரணமாக, லட்சக்கணக்கான சந்தாதாரர்களை இழந்து, நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் வருவாய் இழப்பை சந்திக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய நடைமுறையை கொண்டுவர முடிவு செய்துள்ளது.

புதிய நடைமுறை:

இதுதொடர்பான தகவலின் படி, ஒரே வீட்டில் வசிக்கும் நபர்களால் மட்டுமே இனி நெட்பிளிக்ஸ் கணக்கிற்கான பாஷ்வேர்டை பகிர முடியும். வேறு நபர்களுடன் பாஸ்வேர்டை பகிர்ந்தால் பயனாளர்களிடமிருந்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

வருவாயை இழந்த நெட்பிளிக்ஸ்:

முன்னதாக நடப்பாண்டு தொடக்கத்தில் வெளியான தகவலின்படி, நெட்பிளிக்ஸ் தளத்தில் இனி விளம்பரங்களை கொடுக்கப்போவதாகவும் அதுவும் இந்த வருடத்தில் கடைசியில் இது நடைமுறைக்கு வரும் என்றும் தகவல் வெளியானது. பாஸ்வேர்டை பகிர்ந்து ஒரே கணக்கை பலர் பயன்படுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.  இதன் காரணமாக லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறினர். 

நெபிளிக்ஸ் கூறியது என்ன?

இது குறித்து பேசிய நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர்  ரீட் ஹேஸ்டிங்ஸ்(Reed Hastings), இவ்வளவு காலமாக நெட்ஃபிளிக்ஸில் விளம்பங்கள் கிடையாது; பாஸ்வேர்டு ஷேரிங் ஆப்சன் இருந்தது; இவைகளை பயனாளர்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால், இனிவரும் காலத்தில் நெட்ஃபிளிக்ஸில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும். கடந்த பத்தாண்களில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளதால் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலண்டில் மேலும், 2 மில்லியன் வாடிக்கையாளர்களை இழக்கும் என கணித்துள்ளது எனவும் கூறி இருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
Embed widget