XIOMI: `இனி இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அப்டேட் வழங்க முடியாது!’ XIOMI கொடுத்த அதிர்ச்சி லிஸ்ட்..
ஷாவ்மி நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 மாடல்களுக்கும் இனி ஷாவ்மி நிறுவனம் வழங்கும் சாஃப்ட்வேர் அப்டேட் எதுவும் வழங்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.
ஷாவ்மி நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, பல்வேறு ஸ்மார்ட்ஃபோன் மாடல்களுக்கான சப்போர்ட் நீக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 மாடல்களுக்கும் இனி ஷாவ்மி நிறுவனம் வழங்கும் சாஃப்ட்வேர் அப்டேட் எதுவும் வழங்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.
ஷாவ்மி நிறுவனம் அப்டேட் வெளியிடுவது மிகக் குறைவு. மேலும், ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அப்டேட் வெளியிடுவது ஷாவ்மி நிறுவனத்தின் வழக்கம். தற்போது சப்போர்ட் நீக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்கள் ஆகியவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானவை.
மேலு, ஷாவ்மி நிறுவனம் புதிதாக பல்வேறு மாடல் ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டு வருவதால், பிற உற்பத்தி நிறுவனங்களை விட அதிகமான மாடல்களை இந்தப் பட்டியலில் இணைத்துள்ளது. இந்தப் பட்டியலில் பல்வேறு பிரபலமான ரெட்மீ, ரெட்மீ நோட், எம்.ஐ மாடல்களும், எம்.ஐ டேப்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இனி சாஃப்ட்வேர் அப்டேட் வழங்கப்படாத ஷாவ்மி ஸ்மார்ட்ஃபோன்களின் முழுப் பட்டியல் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
- Redmi K20
- Redmi Note 7
- Redmi Note 7S
- Redmi Note 7 Pro
- Redmi 7
- Redmi Y3
- Mi Pad 4
- Mi Pad 4 Plus
- Mi Play
- Mi 9 SE
இங்கு கொடுக்கப்பட்டுள்ள 10 மாடல்களில், ரெட்மீ K20 மாடல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டு, பிரபலமாக பெரிதும் பயன்படுத்தப்பட்டது. தற்போதைய ஆண்டில் ஷாவ்மி 5 என்ற டேபை வெளியிட்டுள்ள ஷாவ்மி நிறுவனம், இதற்கு முன் வெளியிட்ட Mi Pad 4 டேப் மாடலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஷாவ்மி மாடலின் பெரும்பாலான மாடல்கள் ஆண்ட்ராய்ட் செயலியின் இரண்டு வெர்ஷன்களிலும் வேலை செய்யும் என்பதால் அவற்றிற்கு தற்போதைய MIUI 13 வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாவ்மி நிறுவனம் தற்போது விலையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் லெய்கா நிறுவனத்துடன் இணைந்துள்ள ஷாவ்மி நிறுவனம், விரைவில் ப்ரீமியம் மாடல் ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் சமீபத்தில் வெளியான Snapdragon 8 Gen+ 1 சிப்செட், லெய்கா நிறுவனத்தின் கேமரா முதலானவை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் மாடல்களை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்