Samsung GalaxyF235G : மார்ச்-8ல் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி எஃப் 23 5ஜி. என்னென்ன சிறப்புகள்.விலை என்ன?
கேலக்ஸி F23 5G மாடல் மார்ச்,8 அன்று மதியம் அறிமுகப்படுத்தப்படும் .இது இந்திய ரூபாயில் 25 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வராலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விற்பனை ஃபிளிப்கார்ட்டில் தொடங்கும்.
உலக அளவில் மிக பிரபலமான மொபைல் நிறுவனமான சாம்சங் தனது கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போனை மார்ச் 8 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கேலக்ஸி எஃப் 23 5ஜி மாடல் ஃபோன் அனைவரும் வாங்கக் கூடிய விலையில், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கிடைக்கும். இதில் 5ஜி டெக்னாலஜி உடன் வருகிறது.
கேலக்ஸி F23 5G மாடல் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 120Hz அப்டேட்டட் டிஸ்ப்ளே இடம்பெறும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். ஸ்னாப்டிராகன் 750ஜி செயலியைக் கொண்ட பிரிவில் இதுவே முதன்மையானது என்று கூறப்படுகிறது. அதன் வடிவமைப்பின்படி, தொலைபேசியின் முன்புறத்தில் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, ஃபோனின் வால்யூம் பட்டன் அருகில் பிங்கர்பிரிண்ட் ரீடர் இருக்கும். (side-mounted fingerprint reader). இது மூன்று ரியர் கேமராக்களை கொண்டுள்ளது.
கேலக்ஸி F23 5G மாடல் ஹெச்.டி. உடன் கூடிய LCD திரை, 5,000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் ஸ்மாட்ஃபோனில் OIS உடன் 50MP ரியர் கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் பின்புறத்தில் 2MP மேக்ரோ கேமரா ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான One UI 4.1 உடன் அறிமுகமாகும்.
இந்த கேலக்ஸி F23 5G மாடல் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், 6.4 இன்ச் டிஸ்பேளே உடன் வாட்டர் ப்ரூஃப் திறன்களைக் கொண்டுள்ளது. இது 6ஜிபி, 8ஜிபி RAM வேரியன்களில் வெளி வர இருக்கிறது.
கேலக்ஸி F23 5G மாடல் மார்ச்,8 அன்று மதியம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயில் 25 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வராலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விற்பனை ஃபிளிப்கார்ட்டில் தொடங்கும்.
உங்கள் ஸ்மார்ட்ஃபோனை விரைவாக சார்ஜ் செய்ய வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
100ஆவது டெஸ்டில் கோலி படைத்த சாதனை... மகிழ்ச்சியில் பூரித்த அனுஷ்கா சர்மா- வைரல் வீடியோ!
புற்றீசல் பொரி முதல் பொரிச்ச பரோட்டா வரை - இது விரு(ந்)துநகர் விஜயம்...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்