Realme GT Neo 3: 150 வாட்ஸ் சார்ஜர்.. எல்லாமே வேற லெவல்! ஏப்ரல் 29ல் மாஸாக வெளியாகும் ரியல்மியின் அடுத்த மாடல்!
சிறு சிறு மாற்றங்களை கொடுத்து விலை வித்தியாசங்கள் அடிப்படையில் புதிய போன்களை ரியல்மி அவ்வப்போது அறிமுகம் செய்கிறது
பட்ஜெட் பிரியர்களை மனதில் வைத்து தொடர்ந்து போன்களை அறிமுகம் செய்யும் ரியல்மி தொடர்ந்து புதுப்புது போன்களை சந்தையில் இறக்கி வருகிறது. பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் சிறு சிறு மாற்றங்களை கொடுத்து விலை வித்தியாசங்கள் அடிப்படையில் புதிய போன்களை ரியல்மி அவ்வப்போது அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ரியல்மி களமிறக்கும் மாடல் Realme GT Neo 3.
இந்த மாடல் செல்போனை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது ரியல்மி. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் 29ம் தேதி Realme GT Neo 3 மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரியல்மி நிறுவன துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த போன் களமிறங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி விரைவில் Realme Pad 5G இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாகவும், அதற்கான அதிகாரபூர்வ தேதி விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Realme GT Neo 3 சிறப்பம்சங்கள்..
Realme GT Neo 3ஐ பொறுத்தவரை 6.7 இஞ்ச் FHD+ AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் அப்டூ 256ஜிபி வரை கிடைக்கும் எனத் தெரிகிறது. கேமராவை பொறுத்தவரை மூன்று வகையான பின்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 50MP Sony IMX766 கேமராவும், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை 16MP கேமராவும் இன்சைட் பஞ்ச்கோலும் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இந்த மாடல் இரண்டு மாடல்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 150 வாட்ஸ் சார்ஜர் கொண்ட மாடல் 4500 mAh பேட்டரியையும், 80 வாட்ஸ் கொண்ட மாடல் 5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4G LTE, WiFi 6E, Bluetooth 5.2, a USB-C port மற்றும் 5G கனெக்டிவிட்டு பெற்றுள்ளது. விரல்ரேகை சென்சார், விசி கூலிங் டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது
விலை மற்றும் சிறப்பம்சங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செல்போன் வெளியீட்டுக்கு பின்னரே தெரியவரும் என்பதால் மேற்கண்ட சிறப்பம்சங்கள் ஒரு கணிப்பாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்