பணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்கும் நடைமுறை இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம்? அடுத்து என்ன?
பொன்நிறம், சாம்பல் மற்றும் நீல நிறங்களுடன் டிவிட்டரில் உள்ள அக்கவுண்ட்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
ட்விட்டரில் அதிக அளவிலான பங்குகளை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) வாங்கிய பிறகு நிர்வாக ரீதியாகவும், டிவிட்டர் செயலியின் தொழில்துட்பம் ஆகியவற்றில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ட்விட்டர் தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. டிவிட்டரில் போலியான பயனர்களை கண்டறியும் வகையில் வெரிஃபிகேசன் முறையிலும் மாற்றங்களை செய்ய திட்டம் இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
மேலும் பிரபலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு 'official' எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும், போலி கணக்குகளுக்கு 'parody' எனும் பேட்ச் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, டிவிட்டர் (Twitter) நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும் பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் தற்போது பல்வேறு நிறங்களில் அப்டேட் செய்து வழங்கப்படும் நடைமுறை தொடங்கப்பட்டது. பொன்நிறம், சாம்பல் மற்றும் நீல நிறங்களுடன் டிவிட்டரில் உள்ள அக்கவுண்ட்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
டிவிட்டரில் போலியான அக்கவுண்ட்கள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு, ப்ளூ டிக் மட்டுமின்றி தனிநபர் மற்றும் நிறுவனங்களை தனியே அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் வெவ்வேறு வண்ணங்களால் ஆன வெரிஃபிக்கேசன் டிக் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோல்டு நிற டிக் தனியார் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கு கிரே அதாவது சாம்பல் நிற டிக், பிரபலங்கள் அல்லது தனிநபர் ஆகியோருக்கு ப்ளூ நிற டிக் என்ற நடைமுறை தொடர்ந்து வருகிறது.
ட்விட்டரை தொடர்ந்து, பணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்கும் நடைமுறை இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக, டெக் க்ரஞ்ச் இணைய செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பணம் செலுத்தி வெரிஃபைடு கணக்குகளை வாங்கும் நடைமுறையை தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Instagram is working on a subscription plan which includes the blue badge 👀
— Alessandro Paluzzi (@alex193a) February 2, 2023
இது தொடர்பாக, இன்ஸ்டாகிராம் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், மெட்டாவர்ஸை உருவாக்க மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது அணியினர் அதிக அளவில் முதலீடு செய்து வரும் நிலையிலும் எப்படி எல்லாம் மாற்று வருவாயை ஈட்டலாம் என திட்டம் தீட்டி வரும் சூழலிலும் இந்த சந்தா முறை அறிமுகம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.