Google Pixel 6a : இம்மாத இறுதியில் வெளியாகப்போகும் கூகுளின் அடுத்த ஸ்மார்ட்ஃபோன் ! வசதிகள் என்ன ?
யூடியூபர் இசாமி கேட்ஜெட்டின் படி, சுமார் 8 நிமிடங்கள் தொடர்ந்து கேமராவைப் பயன்படுத்திய பிறகு ஸ்மார்ட்போன் சூடாக மாறும் என்று கூறப்படுகிறது
கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல் மாடலான பிக்சல் 6 ஏ மொபைல்போன் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது. கூகுள் நிறுவனத்தின் 5 ஏ மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்த கூகுள் தயங்கியது. காரணம் அது சோதனை முயற்சியில் அத்தகைய வரவேற்பை பெறவில்லை . அதனால் கூகுள் பிக்சல் 6 ஏ மொபைல்போன்களை சோதனை களத்திற்குள் இறக்காமலேயே கூகுள் வெளியிட தயாராகிவிட்டது. இந்த நிலையில் ஜூலை மாத இறுதியில் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் கூகுள் பிக்சல் 6 ஏ மொபைலானது விற்பபைக்கு வரவுள்ளது.
You definitely don’t need to spend £1000 for a great phone! £399 for these beauties #googlepixel6a #Nothingphone1 pic.twitter.com/BeeBA2c2lk
— Brendan 🌈 (@wildlime) July 14, 2022
வசதிகள் :
பிக்சல் 6 ஏ ஸ்மார்ட்போனானது 6.1 இன்ச் முழு எச்டி+ AMOLED டிஸ்ப்ளே 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ மொபைல்களில் இருக்கும் கூகுளின் டென்சர் புராசஸர் தான் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. பிக்சல் 6 ப்ரோவை விட கூகுள் பிக்சல் 6 ஏ வேகமான கைரேகை சென்சார் கொண்டதாக இருக்கும் என்று கடந்த மாதம் ஒரு அறிக்கை பரிந்துரைத்தது.ஸ் இந்த மொபைலின் பின்பக்கம் 2 கேமராக்கள் கொண்ட அமைப்பு கொடுக்கப்படும்.அதில் 12.2 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்பட்டிருக்கும். வீடியோ அழைப்புகள், செல்பி எடுப்பதற்காக 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. யூடியூபர் இசாமி கேட்ஜெட்டின் படி, சுமார் 8 நிமிடங்கள் தொடர்ந்து கேமராவைப் பயன்படுத்திய பிறகு ஸ்மார்ட்போன் சூடாக மாறும் என்று கூறப்படுகிறது.கூகுள் பிக்சல் 6ஏ போன் கேமராவில் 4K தரத்திலான வீடியோக்களை எடுக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
#Google #Pixel6a #GooglePixel6a
— Tunk Sai Kumar (@tsaikumar1989) July 18, 2022
Pre-order begins this week i.e 21st July 2022.
Specs sheet below 👇 pic.twitter.com/Ynvcinmdnf
விலை :
Google Pixel 6a ஆனது மே மாதம் Google I/O 2022 இல் அறிமுகமானது. அமெரிக்காவில், ஒரே 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பக மாறுபாட்டின் விலை $449 (தோராயமாக ரூ. 35,100) ஆகும். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை 37,000 மாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வேரியண்டின் விலை 40 ஆயிரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.