Google Maps Immersive View: இனி ஒரு க்ளிக்கில் பிரத்யேக விர்ச்சுவல் பயண அனுபவத்தைப் பெறலாம்!
Time Slider வசதியைப் பயன்படுத்தி, ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களிலும், வெவ்வேறு வானிலையின்போதும் அந்தப் பகுதிகள் எப்படி இருக்கும் என்பதையும் நாம் இந்த வசதியின் மூலம் பார்க்கலாம்.
கூகிள் குடும்பத்தில் முன்னதாக Google Translate சேவையில் புதிதாக சில features அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் தற்போது Google Maps சேவையும் இணைந்துள்ளது.
புது Feature...
Immersive View எனப்படும் தனித்துவமான, ஒரு இடத்தை அப்படியே பிரதிபலிக்கும் காட்சிகளை வழங்கும் feature ஒன்று விரைவில் கூகுள் மேப்பில் கொண்டுவரப்பட உள்ளது.
தவிர, முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், நியூயார்க், சான் ஃப்ரான்சிஸ்கோ, டோக்கியோ ஆகிய நகரங்களில் மட்டும் இந்தச் சேவை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Immersive View வசதியானது குறிப்பிட்ட இடங்களின் வான்வழிக் காட்சிகள் மற்றும் வீதிக் காட்சிகளை ஒன்றிணைத்து நாம் மேலும் ரசிக்கும் வகையில், பிரத்யேகமாக சிறந்த தரத்தில் வழங்கப்படும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
Introducing an immersive view — a whole new way to explore on Google Maps. 🌎
— Google Maps (@googlemaps) May 11, 2022
You’ll be able to experience what a place looks and feels like before you arrive, powered by advances in AI that allow us to fuse together billions of Street View and aerial images. #GoogleIO pic.twitter.com/UCj7cInz2R
டைம் ஸ்லைடர் வசதி
Time Slider வசதியைப் பயன்படுத்தி, ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களிலும், வெவ்வேறு வானிலையின்போதும் அந்தப் பகுதிகள் எப்படி இருக்கும் என்பதையும் நாம் இந்த வசதியின் மூலம் பார்க்கலாம், மேலும் பரபரப்பான இடங்கள் எங்குள்ளன என்பதையும் இதன் மூலம் கண்டறியலாம்.
மேலும் உணவகங்கள் மற்றும் பிற இடங்களுக்கு நாம் செல்வதற்கு முன் அவை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய யோசனைகளையும்கூட பெறலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்