மேலும் அறிய

Galaxy F54 5G India: கேலக்ஸி எஃப்54 5ஜி.. இந்தியாவில் வெளியாகும் தேதியை அறிவித்த சாம்சங்.. விவரங்கள் இதோ..!

சாம்சங் நிறுவனம் தனது எஃப் சீரிஸில் அடுத்த மாடலான கேலக்ஸி எஃப்54 5ஜி ஸ்மார்ட் ஃபோனை, இந்தியாவில் வெளியிட உள்ள தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் எஃப் சீரியஸ்:

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த எஃப்-சீரிஸ் ஸ்மார்ட்போனான கேலக்ஸி54 5ஜி மாடல் தொடர்பாக, கடந்த சில காலமாகவே மறைமுகமாக பல்வேறு தகவல்களை வெளியிட்டு பயனாளர்களை சீண்டி வந்தது. இந்நிலையில், ஒருவழியாக தனது புதிய ஸ்மார்ட் ஃபோனின் வெளியீட்டு தேதியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதோடு வரவிருக்கும் அந்த புதிய கேலக்ஸி எஃப்54 5ஜி ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தேதியையும் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

வெளியீட்டு தேதி:

அதன்படி, கேலக்ஸி எஃப்54 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் ஜுன் 6ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் எஃப் சீரிஸில் புதியதாக இணைய உள்ள வரும் மாடல் இது.

முன்பதிவு தொடங்கும்:

கேலக்ஸி எஃப்54 5ஜி மாடல் ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இணையதளங்களில் பயனாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். வெறும் 999 ரூபாய் செலுத்தி பயனாளர்கள் செல்போனை முன்பதிவு செய்யலாம் எனவும், அவ்வாறு செய்பவர்களுக்கு 2000 ரூபாய்க்கான சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன?

Samsung Galaxy F54 5G ஆனது 6.7 இன்ச் FHD+ Super AMOLED Plus Infinity-O டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வர வாய்ப்புள்ளது. மாலி-ஜி68 எம்பி5 ஜிபியு உடன் நிறுவனத்தின் உள்-எக்ஸினோஸ் 1380 SoC மூலம் இந்த மாடல் இயக்கப்படும். சாம்சங் போனின் கேமரா திறன்களை மேம்படுத்தி வருகிறது. அதன்படி, கேலக்ஸி எஃப்54 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் நைட்கிராஃபி அம்சத்துடன் வருகிறது, இது பயனர்கள் குறைந்த வெளிச்சத்தில் புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது. ஃபோன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 108 எம்பி முதன்மை கேமராவுடன் வருகிறது. ஃபிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்23 சீரிஸுடன் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்ட்ரோலாப்ஸ் அம்சத்துடன் இந்த போன் வருகிறது, மேலும் இது கேலக்ஸி எஃப்54 5ஜியிலும் கிடைக்கிறது. கேமரா பயன்முறையானது, ஸ்டார் ட்ரெய்லஸை படம்பிடிக்க பயனர்களை அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி, ஒரே கிளிக்கில் 4 வீடியோக்கள் மற்றும் 4 புகைப்படங்கள் வரை எடுக்கும் சிங்கிள் டேக் பயன்முறையுடன் கேமராவும் வருகிறது. 16 வெவ்வேறு உள்ளமைக்கப்பட்ட லென்ஸ் விளைவுகளைக் கொண்ட வேடிக்கையான பயன்முறையும் உள்ளது.

விலை விவரங்கள்:

புதிய ஸ்மார்ட் போனின் விலை இந்திய சந்தையில் 30 ஆயிரம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. புதிய கேலக்ஸி எஃப்54 5ஜி மாடல் இந்திய சந்தையில், Oppo Reno 8, Iqoo Neo 7 மற்றும் புதிய Poco F5 ஆகிய மாடல்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 :  குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)

Lok Sabha Speaker Election: களைகட்டப்போகும் நாடாளுமன்றம் : 26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் - சந்திரபாபு தீவிரம்
களைகட்டப்போகும் நாடாளுமன்றம் : 26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் - சந்திரபாபு தீவிரம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்

T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

metaverse

வீடியோ

Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!Thirupachi Benjamin | பிரபல ஹோட்டலில் விருந்து..பூரித்துபோன நரிக்குறவ மக்கள்! அசத்திய நடிகர்Modi Odisha Event | ஒலித்த வாழ்த்து பாடல்..அமர்ந்த மோடி!பதறிய அமித்ஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 :  குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Lok Sabha Speaker Election: களைகட்டப்போகும் நாடாளுமன்றம் : 26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் - சந்திரபாபு தீவிரம்
களைகட்டப்போகும் நாடாளுமன்றம் : 26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் - சந்திரபாபு தீவிரம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து! உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விரைவில் கொண்டு வரப்படும் - முதலமைச்சர் உத்தரவாதம்
T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
T20 World Cup 2024 BAN vs NED: டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Rasipalan: துலாமுக்கு நன்மை, விருச்சிகத்துக்கு தெளிவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?

Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Tamilisai Soundararajan: அமித்ஷா கண்டித்தாரா? - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

Speaker: ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்?: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி !

Embed widget