Asus Zenfone 9 : ஜூலை மாதம் வெளியாகிறது Asus Zenfone 9.. டாப் வசதிகள் என்னென்ன தெரியுமா?
நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டில் காட்டப்பட்டது
பிரபல ஆஸஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. Asus Zenfone 9 என்னும் புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஜூலை 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நியூயார்க்கில் காலை 9 மணிக்கும், பெர்லினில் பிற்பகல் 3 மணிக்கும், தைபேயில் இரவு 9 மணிக்கு (மாலை 6.30 மணி IST) அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Asus Zenfone 9 video leaked ahead of launch
— Mahesh Ahir (@maheshahir85) July 7, 2022
- 5.9" FHD+ 120Hz Samsung AMOLED
- Snapdragon 8+ Gen1
- 50MP IMX766(OIS) Dual Rear camera
- 4300mAh battery
- Side fingerprint
- 3.5mm headphone jack
- IP68 dust and water resistance#Asus #AsusZenfone #AsusZenfone9 pic.twitter.com/wLPAIlAET3
Asus Zenfone 9 சிறம்பம்சங்கள் :
Asus Zenfone 9 ஆனது 5.9 இன்ச் சாம்சங் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. Zenfone 9 Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் திரை புதுப்பித்தல் வீதம் 120Hz ஆக இருக்கும் என கூறப்படுகிறது.ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே டிசைனுடன் பல வண்ண விருப்பங்களில் மொபைல்போன் வெளியாக இருப்பது டீசரின் வாயிலாக புரிந்துக்கொள்ள முடிகிறது.Asus Zenfone 9 ஆனது LED ப்ளாஷ் உடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கேமராவானது 50-மெகாபிக்சல் சோனி IMX766 முதன்மை லென்ஸைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரையும் Asus Zenfone 9 கொண்டிருக்கிறது. . 4,300mAh பேட்டரி , இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றைப் Zenfone 9 இல் பெறலாம். மேலும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டில் காட்டப்பட்டது. இது மே 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Zenfone 8 க்கு அடுத்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
New ASUS ZenFone 9. I really like the design of this phone!🔥😻 What your thoughts?
— Geekman (@GeekmanOfficial) July 7, 2022
- 5.9-inch (2400 × 1080 pixels) Full HD+ AMOLED HDR 10+, 120Hz
- Snapdragon 8+ Gen 1
- 50MP + 12MP Rear Camera
- Water and dust resistant (IP68)#AsusZenfone9 #asuszenfone #asus pic.twitter.com/kwSsfBLq3A