MacBook Air: அறிமுகமானது ஆப்பிளின் புதிய மேக்புக் ! என்னென்ன வசதிகள் இருக்கு ?
மேக்புக் ஏர் (2020) மாடலுடன் ஒப்பிடும்போது மெல்லிய பெசல்களுடன், டிஸ்ப்ளே 13.6-இன்ச் அதிகம்.
ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய M2 சிப்செட்டை WWDC 2022 இல் வெளியிட்டது. தற்போது இந்த சிப்செட் பொருத்தப்பட்ட இரண்டு லேப்டாப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மேக்புக் ஏர் (2022) மற்றும் மேக்புக் ப்ரோ (2022) என இரண்டு விதங்களில் அறிமுகமாகியுள்ளது. இதில் மேக்புக் ஏர் (2022) என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதனை பார்க்கலாம்.
View this post on Instagram
ஆப்பிள் மேக்புக் ஏர் (2022) வசதிகள் :
புதிதாக அறிவிக்கப்பட்ட Apple MacBook Air (2022) ஆனது M2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, இது மேக்புக் ஏர் (2020) மாடலில் அறிமுகமான முதல் தலைமுறை M1 ஆப்பிள் சிலிக்கான் சிப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சிப்செட் அதன் முன்னோடிகளை விட 18 சதவிகிதம் மேம்படுத்தப்பட்ட CPU செயல்திறன் மற்றும் 35 சதவிகித GPU செயல்திறனை வழங்குகிறது.10-கோர் செயலிகளுடன் ஒப்பிடும்போது 1.9 மடங்கு வேகமாகவும் (CPU) 2.3 மடங்கு வேகமாகவும் (GPU) இருப்பதாகவும் ஆப்பிள் கூறுகிறது. 6K வீடியோ தொழில்நுட்பம் கிடைக்கிறது. மேலும் அடுத்த அப்டேட்டான iOS 16 பொருத்தப்பட்டிருக்கிறது.2021 மேக்புக் ப்ரோ வரிசையில் இடம்பெற்ற மினி-எல்இடி மாடல்களைப் போல் இல்லாமல், ஆப்பிள் 13.6-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவுடன் மேக்புக் ஏர் (2022) ஐப் பொருத்தியுள்ளது. மேக்புக் ஏர் (2020) மாடலுடன் ஒப்பிடும்போது மெல்லிய பெசல்களுடன், டிஸ்ப்ளே 13.6-இன்ச் அதிகம். மேக்புக் ஏர் (2022) 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மேக்புக் ப்ரோ மாடல்களைப் போலவே சிறந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. Apple MacBook Air (2022) ஆனது 2TB SSD சேமிப்பகத்தை வழங்குகிறது மற்றும் 24GB வரை ஒருங்கிணைந்த நினைவகத்தை வழங்குகிறது.1080p கேமராவைக் கொண்டுள்ளது. இது 2020 மாடலில் உள்ள 720p கேமரா இருந்தது.மேக்புக் ஏர் மாடல் இரண்டு USB Type-C/ Thunderbolt 4 போர்ட்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் MagSafe சார்ஜிங் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்கிற்கான ஆதரவுடன் 18 மணிநேர பேட்டரி ஆதரவுடன் வருகிறது. Type-C பவர் அடாப்டருடன் வருகிறது. இதன் காரனமாக 30 நிமிடங்களில் 50 சதவிகிதம் வேகமாக சார்ஜ் செய்ய முடியுமாம்.
View this post on Instagram
விலை :
Apple MacBook Air (2022) விலை $1,199 ( ரூ. 93,300) இல் தொடங்குகிறது. M1 சிப் கொண்ட பழைய மேக்புக் ஏர் தொடர்ந்து $999 ( ரூ. 77,500) கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.மிட்நைட், சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்டார்லைட் கோல்ட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதனை ஆப்பிள் இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும். 2020 ஆம் ஆண்டில், ஆப்பிள் கடைசி தலைமுறை 13 இன்ச் மேக்புக் ஏர் மாடலை ரூ.92,900 என்னும் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.