Acer: மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்ட லேப்டாப் ! - விலை எவ்வளவு தெரியுமா?
ஏசர் சேஸ்ஸின் மேல் எந்த பெயிண்ட்டையும் பயன்படுத்தவில்லை . பிசிஆர் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியுள்ளதால் வெளிர் சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது.
பிரபல லேப்டாப் உற்பத்தி நிறுவனமான Acer ,சமீபத்தில் தனது கணிப்பொறி , லேப்டாப் , புரெஜக்டர்ஸ் என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் தனது 2022 ஆம் ஆண்டுக்கான படைப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது ஏசர் நிறுவனம் . அதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய ஆஸ்பயர் வெரோ லேப்டாப்ஸ்தான்.
மறுசுழற்சியை கையில் எடுக்க காரணம் என்ன?
தொழில்நுட்ப நிறுவனங்கள் கார்பன் தடயங்களைக் குறைக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன. மின் கழிவுகளை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கு நோக்கில் பல நிறுவனங்கள் சார்ஜர், ஹெட்போன்ஸ் போன்ஸ் போன்ற பிற தொழில்நுட்ப சாதனங்களில் உற்பத்தியை குறைத்துவிட்டன. ஏசர் சமீபத்தில் "பசுமை" சாதனங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட இரண்டு புதிய vero சீரிஸ் லேப்டாப்களை சந்தைப்படுத்தியுள்ளது.
ஏசர் ஆஸ்பியர் வெரோ வடிவமைப்பு:
ஏசர் ஆஸ்பியர் வெரோவின் தோற்றம், ஏசரின் மற்ற ஆஸ்பயர் தொடரிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதில் நமக்கு சந்தேகம் வேண்டாம். ஏசர் சேஸ்ஸின் மேல் எந்த பெயிண்ட்டையும் பயன்படுத்தவில்லை . பிசிஆர் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியுள்ளதால் வெளிர் சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. ஏசர் லோகோ மற்றும் லேப்டாப்பில் உள்ள அனைத்து லேபிள்களும் பிளாஸ்டிக்கில் பொறிக்கப்பட்டுள்ளது.
வசதிகள் :
Acer Aspire Vero முழு-எச்டி (1920x1080 பிக்சல்கள்) கொண்ட 15.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனலைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 11வது Gen Intel Core i5-1135G7 குவாட் கோர் CPU உடன் மட்டுமே கிடைக்கிறது. ஒருங்கிணைந்த Intel GPU வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பை 8ஜிபி அல்லது 16ஜிபி DDR4 ரேம் மூலம் வாங்கலாம். 8 ஜிபி மாடலில் உள்ள ரேம் 12 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது.512ஜிபி PCIe NVMe SSD உள்ளது. ஏசர் ஆஸ்பியர் வெரோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 720p வெப்கேம் மற்றும் 48WHr பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வயர்லெஸ் இணைப்பில் Wi-Fi 6 மற்றும் புளூடூத் 5.1 ஆகிய வழக்கமான வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தியாவில் Acer Aspire Vero விலை:
ஏசர் ஆஸ்பயர் வெரோவை இந்தியாவில் 79,999, என்னும் MRP விலையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் தற்போது இது குறைவான விலையில் கிடைக்கிறது. 8ஜிபி ரேம் கொண்ட மாறுபாட்டின் விலை ரூ. 57,999 மற்றும் 16ஜிபி ரேம் கொண்ட ஒன்றின் விலை ரூ. 62,999. RAM இல் உள்ள வேறுபாட்டைத் தவிர, இரண்டு வகைகளும் ஒரே மாதிரியான வசதிகளை கொண்டுள்ளது. இதில் 11th Gen Intel Core i5 CPU மற்றும் 512GB SSD ஆகியவையும் அடங்கும். இது மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது என்றும் இதனை மீண்டும் மறுசுழற்சி செய்யலாம் என்றும் ஏசர் கூறுகிறது.