மேலும் அறிய

மீண்டும் விலையை உயர்த்தப்போகும்  Jio, Airtel,Vi நிறுவனங்கள் ! - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

என்னதான் விலையை உயர்த்தினாலும் கூட 5ஜி பயன்பாடு அதிகரிக்க தொடங்கினால் , வருகிற  2023 நிதியாண்டின் இறுதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 40 மில்லியன் புதிய பயனர்களைச் சேர்க்கும்

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை மீண்டும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே  பெட்ரோல் விலை உயர்வு , சமையல் எரிவாயு விலை உயர்வு , அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்களை இன்னலுக்கு ஆழ்த்தியுள்ள சூழலில் , தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களின் பங்கிற்கு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. நாட்டின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ,ஜியோ, வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னதாக நவம்பர் 2021 இல் விலைகளை 25% வரை உயர்த்தின.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலைகளை 10 முதல் 12% வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன, இது ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) சுமார் 10% அதிகரிக்கும்.


மீண்டும் விலையை உயர்த்தப்போகும்  Jio, Airtel,Vi நிறுவனங்கள் ! - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

 

விலைகள் இருந்தபோதிலும், 2023 நிதியாண்டின் இறுதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 40 மில்லியன் புதிய பயனர்களைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 2021 இல் கட்டணங்களை ஏறக்குறைய 25% உயர்த்திய போதிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து சிக்கலை எதிர்க்கொண்ட்டு வருவதால், இது மற்றொரு கட்டண உயர்வுக்கு வழி வகுத்துள்ளது . புதிய கட்டண உயர்வு  வருகிற தீபாவளி பண்டிகை முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளரின் சராசரி வருவாய் (ARPU) ரூ.200 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே அதிகப்படியான கடன் சுமையும், போட்டியும் எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசு 5ஜி அலைக்கற்றைக்கான விலையை  குறைத்திருப்பது, நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. என்னதான் விலையை உயர்த்தினாலும் கூட 5ஜி பயன்பாடு அதிகரிக்க தொடங்கினால் , வருகிற  2023 நிதியாண்டின் இறுதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 40 மில்லியன் புதிய பயனர்களைச் சேர்க்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, புதிய சந்தாக்கள் தற்போது 60% அளவில் கிராமப்புரங்களில் அதிகரிக்கும் என கூறுகின்றனர்.தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொருத்தவரையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் ஆகியவை புதிய சந்தாதாரர்களை வ்ழங்கி பயனாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் வோடபோன் ஐடியா சுமாரான லாபத்தை பெறலாம். எது எப்படியோ இந்த புதிய அறிவிப்பு பயனாளர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களுக்கு வரும் காலங்களில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்
                                                                                                                                                                                                                                        

தலைப்பு செய்திகள்

Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!
ரூ.85,000-க்கும் கீழ் Samsung Galaxy S25 Ultra 5G? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகை!

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget