Watch Video : மின்சாரம் தாக்கி இனி உயிரிழப்புக் கூடாது.. சூப்பர் ரோபோவை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்!
வரும் 2024 ஆம் ஆண்டு இதே போல பல ஹூமணாய்ட் ராட்சத ரோபோக்களை பணியமர்த்த அந்நாட்டு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
ஜேஆர் வெஸ்ட் என்றும் அழைக்கப்படும் மேற்கு ஜப்பான் ரயில் நிறுவனம், மனிதர்களுக்கு ஆபத்தானதாகக் கருதப்படும் வேலைகளைச் செய்ய ரோபோக்களை பணியமர்த்தியுள்ளது.
மனித ரோபோக்கள்..
இணைய மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் வாழும் நமக்கு இனியும் மனித ரோபோக்கள் என்றால் அதிசியக்க தேவையில்லை. உலகின் பல்வேறு மூலைகளில் ரோபோக்கள் மனிதர்களுக்கு இணையான வேலைகளை செய்ய துவங்கிவிட்டன. சில சமயங்களில் மனித சக்திக்கும் மேலான வேலைகளை கூட செய்யும் என்பதில் சந்தேகமில்லை. சைனா , கொரியா , ஜப்பான் போன்ற நாடுகள் ரோபோக்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியிருப்பதை நாம் செய்திகள் வாயிலாக அறிந்துக்கொள்கிறோம். அந்த வகையில் ஜப்பானிய ரயில் நிறுவனம் ஒன்று , மின்சார கம்பிகளை சுத்தம் செய்வது மற்றும் பழுது பார்ப்பதற்கு ரோபோவை பணியமர்த்தியுள்ளது.
【News Release】
— JR西日本ニュース【公式】 (@news_jrwest) April 15, 2022
生産性・安全性向上に向けて、株式会社人機一体および日本信号株式会社と共同で、人型重機ロボットと鉄道工事用車両を融合させた多機能鉄道重機を開発しています。
詳しくはこちらをご覧ください。https://t.co/R8X32nmuJU pic.twitter.com/FBVjIe1xCC
எப்படி செயல்படும் இந்த மனித ரோபோ?
மனிதனை போலவே இதற்கும் கைகள் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் அதில் மல்டி ஆங்கில் பிரஷ் செட்டப்பும் உள்ளது. இதன் மூலம் ரோபோ மின்சார கம்பியில் இருக்கும் தூசுக்களை சுத்தம் செய்யும். அதேபோல மற்ற கருவிகளுடன் இறுக பிடித்துக்கொள்ளும் வகையில் கிளாம்ப் போன்ற வடிவமைப்பும் உள்ளது அதன் மூலம் மின்சார கம்பிகளின் பழுதுகளை ரோபோ செய்யும்.விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) ஹெட்செட் மூலம் ரோபோவை கையாளும் மனித ஆபரேட்டருக்கு கண்களாக செயல்படும் ஒரு ஜோடி டிஜிட்டல் கேமராக்கள் உடற்பகுதியின் மேல் அமைந்துள்ளது.மோஷன்-டிராக்கிங்கைப் பயன்படுத்தி, ஆபரேட்டர் ரோபோவில் உள்ள கேமராக்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். ரோபோக்களின் கைகளையும்தான்.
Nippon Singal company and Human Machinery இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். இவ்வகை ரோபோக்கள் ராட்சத வகை ரோபோக்கள் லிஸ்டில் உள்ளன. இது தற்போது சோதனை முயற்சியாக களமிறக்கப்பட்டிருக்கிறது. வரும் 2024 ஆம் ஆண்டு இதே போல பல ஹூமணாய்ட் ராட்சத ரோபோக்களை பணியமர்த்த அந்நாட்டு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இது மின்சார இணைப்புகள் மற்றும் மிகப்பெரிய உயரத்தில் வேலை செய்யும் ஆற்றலுடையது. குறிப்பாக அதிக ஆபத்துள்ள வேலைகளில் இருந்து மனிதர்களை வெளியேற்ற உதவும். என்னதான் மனிதர்கள் நாள் முழுக்க பார்க்கும் வேலைகளை சில நிமிடங்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ செய்து முடித்தாலும் இதற்காக செலவிடும் தொகை அதிகம்தான். ஆனாலும் அந்த வேலைக்கு செலவிடும் தொகையால் மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதால் அது worth என்கின்றனர் ஆய்வாளர்கள்.