Infosys CEO Salary: அடேங்கப்பா...! 42 கோடியிலிருந்து டபுளாக எகிறிய இன்ஃபோசிஸ் சிஇஓவின் சம்பளம்!
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சலீல் பாரேக் உள்ளார்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று இன்ஃபோசிஸ். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது சலீல் பாரேக் இருந்து வருகிறார். இவர் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சலீல் பாரேகின் வருமானத்தை 88 சதவிகிதகம் அதிகமாக இன்ஃபேசிஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 42 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் வாங்கி வரும் சலீல் பாரேக் இந்த நிதியாண்டு முதல் 79 கோடி ரூபாய் வருமனாக பெற உள்ளார். இதன்மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
மேலும் சலீல் பாரேக்கை வரும் ஜூலை 1 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தலைமை செயல் அதிகாரியாக இன்ஃபோசிஸ் நிறுவனம் நியமித்துள்ளது. அவருடைய தலைமையின் கீழ் இன்ஃபோசிஸ் நிறுவனம் செயல்பட்டதன் காரணமாக இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2018 நிதியாண்டில் 70,522 கோடி ரூபாயாக இருந்த இன்ஃபோசிஸ் வருமானம் தற்போது 1,21,641 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த நிறுவனத்தின் டிஜிட்டல் வருமானமும் தற்போது 57 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகமாக வருமானம் பெறும் தலைமை செயல் அதிகாரியாக சலீல் பாரேக் உள்ளார். டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் ஆண்டிற்கு 25.76 கோடி ரூபாய் வருமானம் பெற்று வருகிறார். விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ ஆண்டிற்கு 64.34 கோடி ரூபாய் வருமானம் பெற்று வருகிறார். ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சிஇஓ 32.21 கோடி ரூபாய் ஆண்டு வருமானமாக பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

