Whatsapp Outage: வாட்ஸ்-ஆப் சேவை முடக்கம்.. இதுவா காரணம்? விளக்கம் கேட்ட மத்திய அமைச்சகம்..
வாட்ஸ் ஆப் சேவை முடங்கியதை அடுத்து இந்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் செயல்படும் மெட்டா நிறுவனத்திடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் சேவை முடங்கியதை அடுத்து இந்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் செயல்படும் மெட்டா நிறுவனத்திடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. மெட்டாவின் வாட்ஸ் அப் தளத்தில் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிரலாம். அக்டோபர் 25 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் ஆப்பின் சேவைகள் 2 மணிநேரம் தடைபட்டன. வாட்ஸ்ஆப் அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் வெப் சேவை முடங்கியதாக மெட்டா ஒரு அறிக்கையில் ஒப்புக்கொண்டது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக உள்ளது. டெக்ஸ்ட் மெசேஜ், வீடியோ, போட்டோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியை பள்ளிக்கூடம் முதல் அலுவலகம் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை குழுக்களாக ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்த சேவைகள் முடங்கியதையடுத்து, இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ் ஆப் செய்தி தளத்தின் நீண்ட இடையூறு பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு அறிக்கையை வெளியிடுமாறு மெட்டா இந்தியாவிடம் (meta india) கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது போன்ற நீண்ட சேவை முடகங்களுக்கு பின் ஏதேனும் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ள்தா என தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் கண்காணித்து வருகிறது.
உலகளாவிய வாட்ஸ் ஆப் செயலிழப்பிற்கு பின்னால் சைபர் தாக்குதல் ஏதேனும் இருந்தால், Meta அறிக்கையை CERT-In அல்லது இந்தியாவின் சைபர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் என்ற அமைப்புக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சைபர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
நேற்று மதியம் 12 மணியளவில் உலகில் பல பகுதிகளில் வாட்ஸ்ஆப் சேவை 2 மணிநேரம் செயலிழந்தது. இதில் 69 சதவீத பயனர்கள் செய்திகளை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், அதே நேரத்தில் 21 சதவீத பயனர்கள் network issues சந்திது வந்தனர். மேலும் 9 சதவீதம் பேர் காரணம் அறியாமல் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்த முடியவில்லை. இந்த சிக்கல் இந்தியாவில் மட்டும் அல்ல இது உலகில் பல பகுதிகளில் பாதித்ததாக தெரிய வந்துள்ளது. வாட்ஸ்-அப் டவுன் ஏற்கனவே ட்விட்டரில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மைக்ரோ பிளாக்கிங், டெலிகிராம் ஆகிய சேவையை பயன்படுத்தினர். மெட்டா நிறுவனம் இதனை, "தொழில்நுட்பப் கோளாறு" காரணமாக இந்த சேவை முடங்கியதாக கூறியுள்ளது ஆனால் இதனை பற்றி விரிவான விவரங்களை வெளியிடவில்லை.
WhatsApp : அப்பாடா...! மீண்டும் தொடங்கிய வாட்ஸ் அப் சேவை..! நிம்மதி மூச்சுவிட்ட பயனாளர்கள்..!