மேலும் அறிய

Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக் தன்னால் ஏன் நடிக்க முடியவில்லை என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை என்ற படம் மூலமாக அறிமுகமான இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நிகரான ரசிகர்களை கொண்டிருந்தார். ஆனால், 2000த்திற்கு பிறகு இவரது திரை வாழ்வு சறுக்கலைச் சந்தித்தது. 

கார்த்திக் மீது குற்றச்சாட்டு:

இந்த சூழலில், தற்போது நடிகர் கார்த்திக் படப்பிடிப்புக்கு முறையாக வராதது குறித்து இயக்குனர் பாரதி கண்ணன், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. இந்த நிலையில், நடிகர் கார்த்திக் பல வருடங்களுக்கு முன்பு தான் சரியாக நடிக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

நடிக்க வராதது ஏன்?

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, இதுதான் என்னுடைய கேரியர். இதை நான் நேசிக்க ஆரம்பிச்ச கட்டம்.  அந்த நேரத்துல வந்ததுதான் மெளனராகம். அதுல இருந்துதான் என் திரை வாழ்க்கை ஏறுமுகமானது. இந்த நேரத்தில் எனக்கு ஏராளமான தனிப்பட்ட பிரச்சினைகள். பல விஷயங்கள் ஒரே நேரத்தில் கூடி வந்த நிலையில் சில கட்டாய சூழ்நிலைகளால் என்னால் நடிக்க முடியாத ஒரு நிலை. நான் நடிக்கனும்னு ஒரு எண்ணம் இருந்தாலும் பல பல காரணங்கள், சில நல்லவர்கள் செய்த சில காரியங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இடைவெளியை உண்டாக்கிவிட்டது. 

இவ்வாறு அவர் அந்த காணொளியில் பேசியுள்ளார். இது கார்த்திக் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஆகும்.

நடிகர் கார்த்திக் படப்பிடிப்பிற்கு முன்பணம் வாங்கிவிட்டு முறையாக படப்பிடிப்பிற்கு வரவில்லை என்று பலரும் குற்றச்சாட்டை தற்போது முன்வைத்து வருகின்றனர். நடிகர் கார்த்திக் 100 படங்கள் வரை கதாநாயகனாக நடித்துள்ளார்.

17 ஆண்டுகளில் 100 படங்கள்: 

1981ம் ஆண்டு அறிமுகமான கார்த்திக் 1998ம் ஆண்டு தனது 100வது படத்தில் நடித்தார். 17 வருடங்களில் 100 படங்களில் நடித்த கார்த்திக் 2000த்திற்கு பிறகுதான் முறையாக படப்பிடிப்பிற்கு வராதது போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார். 

அலைகள் ஓய்வதில்லை, அக்னி நட்சத்திரம், கிழக்க வாசல், வருஷம் பதினாறு, பொன்னுமணி, பூவேலி மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா, மெளன ராகம், கிழக்கு வாசல், வருஷம் பதினாறு, அக்னி நட்சத்திரம், பாண்டி நாட்டு தங்கம், பொன்னுமணி, பிஸ்தா, மேட்டுக்குடி போன்ற பல வெற்றிப் படங்களை அளித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Bigg Boss Tamil 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த பிரசாந்த்!
Bigg Boss Tamil 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த பிரசாந்த்!
Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?
Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: நாளை திங்கள்கிழமை.. என்ன பேசப்போகிறார் முதலமைச்சர் விஜய்? எதிர்பார்ப்பில் தமிழ்நாடு!
CM Vijay: நாளை திங்கள்கிழமை.. என்ன பேசப்போகிறார் முதலமைச்சர் விஜய்? எதிர்பார்ப்பில் தமிழ்நாடு!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
கொளத்தூர் கொத்து பரோட்டா.. ஓட்ட நிதி..! தரம் தாழ்ந்த விமர்சனங்களை தொடுக்கும் தவெக!
கொளத்தூர் கொத்து பரோட்டா.. ஓட்ட நிதி..! தரம் தாழ்ந்த விமர்சனங்களை தொடுக்கும் தவெக!
Bigg Boss Tamil 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த பிரசாந்த்!
Bigg Boss Tamil 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த பிரசாந்த்!
பல ஆண்களுடன் திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்
பல ஆண்களுடன் திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்
Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
TVK:
TVK: "திங்கள்கிழமை பதறாமல் பதிலுரை கேளுங்கள்.." உதயநிதிக்கு தவெக அட்வைஸ்!
சதுப்பு நிலத்தை காப்பதா? அழிப்பதா? - ரூ.21 கோடி திட்டத்துக்கு சௌமியா அன்புமணி கடும் எதிர்ப்பு
சதுப்பு நிலத்தை காப்பதா? அழிப்பதா? - ரூ.21 கோடி திட்டத்துக்கு சௌமியா அன்புமணி கடும் எதிர்ப்பு
Embed widget