McLaren 765 LT: இந்தியாவில் யாரிடமும் இல்லாத விலையுயர்ந்த காரை வாங்கிய தொழிலதிபர்; விலை எவ்வளவு தெரியுமா?
McLaren 765 LT : இந்தியாவில் முதல் மெக்லரான் கார் உரிமையார் இவர்.
ஹைத்ராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான நாசீர் கான் (Naseer Khan) மிக விலை உயர்ந்த மெக்லரான் 765 LT ஸ்பைடர் (McLaren 765 LT Spider) காரை வாங்கியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மிகவும் பிரபலமான மெக்லரான் 765 LT கார் இந்தியாவில் விற்பனையை தொடங்கியுள்ளது. இந்திய ரூபாயில் 12 கோடி இதன் விலை. ஹைத்ராபாத்தில் உள்ள Taj Falaknuma அரண்மனையில் நாசீரிடம் மெக்லரான் 765 LT வழங்கப்பட்டது. இந்தியாவில் மெக்லரான் 765 LT ஸ்பைடர் காரை வைத்திருக்கும் முதல் நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நாசீர்.
View this post on Instagram
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,” பிரமிக்க வைக்கும் அழகே, MCLAREN 765LT SPIDER- உன்னை வீட்டிற்கு வரவேற்கிறேன்.” என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
மெக்லரான் 765 LT ஸ்பைடர் காரின் சிறப்பம்சங்கள்:
லக்ஸரி கார் ரகங்களில் ஒன்றான மெக்லரான் 765 LT ஸ்பைடர் தொழில்நுட்ப ரீதியிலும் பல வசதிகளை கொண்டது. இது ஏரோடைனமின்ஸ் மாடலில்’coupe version' காராகும். இது 11 நொடிகளில் தன் வடிவத்தை மாற்றும் திறன் கொண்டது. 4 லிட்டர் அளவு கொண்ட டர்போ சார்ஜிங் வசதியும் வி8 என்ஜின் உடன் கூடிய பெட்ரோல் மாடல் ஆகும். மேலும், இது 765 Ps அதிகபட்ச torque -இல் 800 நியூட்டன் மீட்டர் அளவு வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது.
View this post on Instagram
நாசீர் கான் பல அரிய வகையான, பிரபலமான சிறந்த கார்களை வாங்குவதை விருப்பமாக கொண்டவர். இதுவரை அவரிடம், கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி 812 சூப்பர் ஃபாஸ்ட், மெர்சிடஸ் பென்ஸ் - G350d, ஃபோர்டு மஸ்டாங்க், லம்போகினி அவெண்டேட்டர், லம்போகினி உரஸ் போன்ற பல விலை உயர்ந்த கார்கள் உள்ளன.