Netflix, Amazon Prime, Disney+ Hotstar - இவற்றை இலவசமாகப் பயன்படுத்துவது எப்படி?
ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஓ.டி.டி தளங்களை மையப்படுத்திப் பல்வேறு ஆஃபர்களை அளித்து வருகின்றன. அன்லிமிட்டட் டேட்டாவும், அன்லிமிட்டட் ஃபோன் கால் வசதியும் இதோடு வழங்கப்படுகின்றன.
ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஓ.டி.டி தளங்களை மையப்படுத்திப் பல்வேறு ஆஃபர்களை அளித்து வருகின்றன. அன்லிமிட்டட் டேட்டாவும், அன்லிமிட்டட் ஃபோன் செய்யும் வசதியையும் அளிக்கும் ரீசார்ஜ் பேக்குகளுடன் இந்த ஆஃபர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் ரூ.399 போஸ்ட்பெய்ட் ப்ளான் மூலம் 75GB டேட்டா வழங்கப்படும். 75GB முடிவடைந்த பிறகு, நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு ஜிபி டேட்டாவுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும். இதே ப்ளானில் 200GB டேட்டா, அன்லிமிட்டட் கால் வசதி முதலானவற்றைச் சிறிது பணம் கூடுதலாக செலுத்திப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இந்தப் ப்ளானில் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் இலவசமாக அனுப்பலாம். ஜியோ டிவி, ஜியோ சினிமா முதலான ஆப்களைப் பயன்படுத்திக் கொள்லலாம். மேலும், இவற்றுடன் ரீசார்ஜ் செய்யப்படும் கட்டணத்தைப் பொறுத்து, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ ஆகியவற்றை இலவசமாகப் பயன்படுத்தும் சேவைகள் வழங்கப்படுகின்றன.
MyJio ஆப் மூலமாக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் முதலானவற்றைப் பயன்படுத்தும் வசதிகளைப் பெறலாம். போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ரூ.399, ரூ.599, ரூ.799, ரூ.999, ரூ.1499 ஆகிய பேக்குகளில் இதே வசதிகள் வழங்கப்படும்.
ஜியோ ப்ரீபெய்ட் பயன்பாட்டாளர்கள் ரூ.401க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் தினமும் 3GB டேட்டா, அன்லிமிட்டட் கால் வசதி, கூடுதலாக 6GB டேட்டா, ஒவ்வொரு நாளும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றுடன் டிஸ்னி ஹாட்ஸ்டார் பயன்பாட்டையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதிகளை 28 நாள்கள் வரை பயன்படுத்தலாம்.
ஏர்டெல்
ஏர்டெல் வழங்கும் போஸ்ட்பெய்ட் திட்டமான ரூ.499க்கு ரீசார்ஜ் செய்தால் 75GB டேட்டா வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் டேட்டா முடிவடையவில்லை எனில், அடுத்த மாதத்திற்கும் மிச்சமாக இருக்கும் டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளலா. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழங்கும் ரிவார்ட்ஸ் கிடைப்பதோடு, அன்லிமிட்டட் கால் வசதி, கூடுதலாக 6GB டேட்டா, ஒவ்வொரு நாளும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவையும் இதில் கிடைக்கின்றன. ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ப்ளான்கள் எதிலும் நெட்ஃப்ளிக்ஸ் இலவசமாக வழங்கப்படுவதில்லை. எனினும், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாக, அமேசான் ப்ரைம் வீடியோவை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். மேலும், ஒரு ஆண்டுக்கான டிஸ்னி ஹாட்ஸ்டார் பயன்பாடும் கிடைக்கிறது.
ப்ரீபெய்ட் பயன்பாட்டாளர்கள் ரூ.599 ரீசார்ஜ் செய்யும் போது, நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் வசதி, ஒவ்வொரு நாளும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றுடன் அமேசான் ப்ரைம் மொபைல் எடிஷன், டிஸ்னி ஹாட்ஸ்டார், Aitel XStream, Wynk Music ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Vi
போஸ்ட்பெய்ட் பயன்பாட்டாளர்கள் ரூ.499 ரீசார்ஜ் செய்து, 75 GB டேட்டா, அன்லிமிட்டட் கால் வசதி, ஒவ்வொரு நாளும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றோடு, 200GB வரை அடுத்தடுத்த மாதங்களுக்கு மிச்சப்படுத்தும் ரோல் ஓவர் வசதியும் பெற்றுக் கொள்லலாம். Vi Movies மட்டுமின்றி, அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் Zee5 ஆகியவற்றை இதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Vi வழங்கும் RedX ப்ளான் ஒவ்வொரு மாதமும் ரூ.1099 விலைக்கு நிர்ணியக்கப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை விமான நிலைய lounge பயன்பாடும் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் ஆண்டிற்கு இலவசமாக டிவியிலும், மொபைலிலும் நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்திக் கொள்ளவும் சலுகை அளிக்கிறது வோடஃபோன். ஆண்டுக்கு ரூ.5988 என்று அளிக்கப்படும் இந்த ப்ளானின் மூலம், Zee5 premium membership வழங்கப்படுவதோடு, ஒரு ஆண்டுக்கான இலவச அமேசான் ப்ரைம் வீடியோ பயன்பாடும் வழங்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் வழங்கும் அன்லிமிட்டட் கால் வசதி, 100 எஸ்.எம்.எஸ் வசதி இதிலும் வழங்கப்படுகிறது. இதனோடு டிஸ்னி ஹாட்ஸ்டார் பயன்படுத்துவதற்கான சலுகையும் இருக்கிறது.
ப்ரீபெய்ட் பயன்பாட்டாளர்களுக்கு Vi நிறுவனம் டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் Zee5 தளங்களை மட்டுமே இலவசமாகவும், சலுகை விலையிலும் அளிக்கிறது. ரூ.401 ரீசார்ஜ் மூலம், நாள் ஒன்றுக்கு 3GB டேட்டா, அன்லிமிட்டட் கால் வசதி, கூடுதலாக 16GB டேட்டா, ஒவ்வொரு நாளும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றுடன் டிஸ்னி ஹாட்ஸ்டார் பயன்படுத்திக் கொள்ள முடியும் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.