WhatsApp payments: இந்தியர்களுக்கு மட்டும் வாட்ஸ் அப் வழங்கும் கேஷ்பேக் ஆஃபர்! எப்படி பெறுவது?
WhatsApp payments Cashback: வாட்ஸ் அப் அறிவித்திருக்கும் அதிரடி கேஷ்பேக் ஆபர்.
உலக அளவில் வாட்ஸ் அப் பயன்பாடு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப்பிற்குதான் முதலிடம். அலுவல், உரையாடல் என எல்லா துறைகளிலும் வாடஸ் அப் பயன்பாடு அதிகரித்து விட்டது. ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த வாட்ஸ் அப் செயலியையும் நிர்வகித்து வருகிறது. வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிதாக அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வாட்ஸ் அப் செயலியின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய கேஷ்பேக் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி வாட்ஸ் அப் மூலம் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ரூ.105 கேஷ்பேக் அறிவித்துள்ளது. எனினும், ஒரே தடவையில் முழு தொகையையும் வாட்ஸ் அப் கேஷ்பேக்காக வழங்காது. நாம் ஒவ்வொரு முறை பணப் பரிவர்த்தனைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை வழங்கும்.
டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துகொள்ள அவ்வபோது கேஷ்பேக் ஆபர்களை வழங்கி வருகிறது. இப்போது வாட்ஸ் இதை முன்னெடுத்துள்ளது.
WhatsApp is the new Google Pay! Sent Re 1 and got a cashback of Rs 35 from #WhatsApp
— Ketan Pratap (@pratapketan) June 15, 2022
Not a bad way to motivate users, but I doubt this will help. pic.twitter.com/aEnOxHLvLd
Cashback பெற என்ன செய்ய வேண்டும்:
- வாட்ஸ் அப்-ஐ லேட்டஸ்ட் வர்சனுக்கு அப்டேட் செய்யுங்கள்.
- உங்கள் நண்பர் யாருக்காவது ரூ.1 பணம் அனுப்புங்கள்.
- பண பரிவர்த்தனை மூலம் உங்களுக்கு ரூ.35 கேஷ்பேக் வழங்கப்படும்.
- அடுத்த இரண்டு தகுதியான பரிவர்த்தனைக்கு மீதமுள்ள தொகை கேஷ்பேக்காக வழங்கப்படும்.
- மொத்தம் ரூ.105 கேஷ்பேக்காக உங்களுக்கு கிடைக்கும்.
- வாட்ஸ் அப் சாட்ஸ் மூலம் பணம் அனுப்புவோருக்கே இந்த வசதி கிடைக்கும்.
ரொம்பவே முக்கியமான தகவல்னா, இந்தியாவில் வசிப்போருக்கும் மட்டுமே இந்த ஆபர் வழங்கப்படுவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உடனே, வாட்ஸ் ஆப் அப்டேட் செய்யுங்க. கேஷ்பேக்-ஐ அள்ளுங்க!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்