மேலும் அறிய

UPDATE ALERT| '' ஐபோன், ஐபேடை உடனே அப்டேட் செய்யுங்கள்''- பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்கள் தப்பிக்க ஒரே வழி , சமீபத்திய iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 அப்டேட் செய்வதுதான்.

ஐபோன் மற்றும் ஐபேட் வைத்திருக்கும் பயனாளர்கள் தங்களது சாதனங்களின் இயங்குதளத்தை புதுப்பிக்க வேண்டும் என CERT -in (CERT-Indian Computer Emergency Response Team) இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுஅவசரகால உத்தரவை பிறப்பித்துள்ளது. ஐபோன் மற்றும் ஐபேடின் முந்தைய புதிப்பிப்புகளில் உள்ள சில பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்த அறிவிப்பு வெளியானதாக தெரிகிறது .  அரசுக்கு சொந்தமான CERT -in குழு, ஐபோன் மற்றும் ஐபேடின் முந்த அப்டேட்டில்   நினைவக திறன்  பாதிப்பு அதாவது memory corruption vulnerability என்ற ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் ரிமோட் அட்டாக்கர்ஸ் ஐபோன் மற்றும் ஐபேடின் நினைவகத்திற்குள் நுழைந்து தகவல் திருட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாக  CERT -in தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


UPDATE ALERT| '' ஐபோன், ஐபேடை உடனே அப்டேட் செய்யுங்கள்''- பயனாளர்களுக்கு எச்சரிக்கை!
தீவிரத்தை உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்களுக்கான புதிய அப்டேட்டை  இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. அதன் படி தற்போது அறிமுகமாகியுள்ள iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 ஆகிவற்றை பயனாளர்கள் உடனடியாக புதிப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிழைத்திருந்தங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த புதிய  அப்டேட்டானது நினைவக திறன் பாதிப்பிலிருந்து 
(memory corruption vulnerability) முழுமையான பாதுகாப்பை வழங்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு அனைத்து ஐபோன் பயனாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  ஐபோன் 6 மற்றும் அதற்கு பிறகான மொபைல் போன்கள் , ஐந்தாம் தலைமுறை மற்றும் அதற்கு பிறகு வெளியான சாதனங்கள், ஐபாட் புரோ மாடல்கள், ஐபாட் ஏர் 2 , ஐபோன் மினி , ஐபேட் டை ( 7வது தலைமுறை ) , மேக் பிக் சர் ( macOS Big Sur)போன்றவை  நினைவக திறன் பாதிப்பு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும்  அந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.


UPDATE ALERT| '' ஐபோன், ஐபேடை உடனே அப்டேட் செய்யுங்கள்''- பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

ரிமோட் அட்டாக்கர்ஸால் தன்னிச்சையான குறியீட்டை (malicious code ) செயல்படுத்துவதற்கும், நினைவகத்தில் உள்ள தகவல்களை திருடுவதற்கும் இந்த பிரச்சனை ஏதுவாக இருக்கும் என  கூறப்படுகிறது.ஐபோன் மற்றும் ஐபேடில் போதுமான நினைவக திறன் இல்லாத பட்சத்தில் , IOMobileFrameBuffer பகுதியில் இந்த பாதிப்பு ஏற்படுவதாக CERT -in  தெரிவித்துள்ளது. Kernel privileges ( கணினி மற்றும் மொபைலின் அனைத்து வன்பொருள் மற்றும் நினைவகத்திற்கும் குறியீட்டை நேரடியாக அணுக அனுமதிக்கும் செயலாக்க முறை) மூலம் ரிமோட் அட்டாக்கர்ஸ் தேவையான பாதிப்பை ஏற்படுத்தவும் இது வழிவகை செய்கிறது. இதிலிருந்து ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்கள் தப்பிக்க ஒரே வழி , சமீபத்திய iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 அப்டேட் செய்வதுதான். உங்கள் மொபைல் மற்றும் ஐபேடில் Settings > General > Software Update என்ற வசதியின் மூலம் இந்த  14.7.1 இயங்குதள பதிப்பினை புதிப்பித்துக்கொள்ளலாம்.

 

 

 

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget