மேலும் அறிய

Google Pay: மொபைல் ரீசார்ஜ் செய்றீங்களா? இனி அதுக்காக தனி கட்டணம் - ஆப்பு வைத்த கூகுள் பே!

கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்யும்போது கூடுதல் கட்டணம் (Convenience Fee) வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Google Pay Recharge: கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்யும்போது கூடுதல் கட்டணம் (Convenience Fee) வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள்:

பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய வசதிதான் UPI (Unified Payments Interface). கடந்த 2016-ஆம் ஆண்டு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையைத் தொடங்கியது. தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகள் மூலம், டீக்கடை தொடங்கி நகைக்கடை வரையிலும் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மின்கட்டண செலுத்துவது முதல் மொபைல் ரீசார்ஜ் வரை அனைத்துமே யுபிஐயில் பயன்படுத்த முடிகிறது.  பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றிற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.   டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. 

ரீச்சார்ஜ் செய்வதற்கு கட்டணம்:

இந்நிலையில், கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்யும்போது கட்டணம் (Convenience Fee) வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்யும்போது ஒரு சதவீதம் முதல் 3 சதவீதம் வரை Convenience Fee எனும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதன்படி, 100 ரூபாய்க்கு எந்த ஒரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால், 100 ரூபாய் மூதல் 200 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்தல் ரூ.1 கட்டணமும், 201 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை ரூ.2 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

மேலும் 301 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ.3 கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Convenience Fee கட்டணத்தை மொபைல் ரீ சார்ஜ்க்கு மட்டுமே வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. மற்ற எந்த ஒரு பரிவர்த்தனைகளுக்கும் இந்த கட்டணம் வசூலிக்கப்படவில்லை.  அதேபோல, போன்பே, பேடிஎம் பேன்றவைகளிலும் Convenience Fee எனும் பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Vijayakanth Health: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை நிலவரம் என்ன? எப்போது டிஸ்சார்ஜ்? - மருத்துவமனை அறிக்கை வெளியீடு

NEET-UG: பயாலஜி படிக்காமலேயே மருத்துவர் ஆகலாம்; தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி- முழு விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget