Google Maps | 'லெஃப்ட்ல திரும்புங்க.. மாமரத்துல ஏறுங்க' - பொறுமையை சோதித்த கூகுள் மேப்!!
கூகுள் பேப் சொன்ன ஒரு வழி இணையத்தில் காமெடி கலந்த விவாதத்தை கிளப்பியுள்ளது.
கூகுள் நிறுவனம் பல முக்கிய அம்சங்களை செயலிகளாக வைத்துள்ளது. அதில் ஒன்றுதான் கூகுள் மேப். எங்கு செல்ல வேண்டும் என்றாலும் செல்போனில் கூகுள் மேப்பை கேட்டால் இப்படி.. அப்படி என வழி சொல்லி நம்மை அழைத்துச் செல்லும். அதுபோக ட்ராபிக் விவரம், பயணிக்கும் தூரம் என பல அம்சங்கள் கூகுள் மேப்பில் உள்ளது. ஆனால் அதே கூகுள் மேப் சில சமயங்களில் சொதப்புவதும் உண்டு. செயலியில் ஏற்படும் சில சிக்கல்களாலும், சில குளறுபடியாலும் தவறு நடக்கும். இடதுபுறம் திரும்புங்கள் என்று சொல்லும், ஆனால் இடதுபுறத்தில் திரும்ப வழியே இருக்காது.
Not Google maps leading us into the bush and having the audacity to say “turn left”. Into the mango tree?
— Alfred (@CallmeAlfredo) December 27, 2021
இப்படியான சிக்கல்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் கூகுள் பேப் சொன்ன ஒரு வழி இணையத்தில் காமெடி கலந்த விவாதத்தை கிளப்பியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில், கூகுள் மேப் எங்களை இடது புறம் உள்ள மாமரத்தில் ஏற சொல்கிறது என பதிவிட்டுள்ளார். இடது புறம் திரும்புங்கள் என கூகுள் மேப் சொன்னதையும், அங்கு மாமரமும், புதருமே இருந்ததையுமே அந்த பயனர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
கூகுள் மேப்பில் ஏற்படும் சில தொழில் நுட்ப குளறுபடிகளால் இப்படி நடந்திருக்கலாம் என பலரும் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தாங்கள் சந்தித்த சில அனுபவங்களை பதிவிட்டுள்ளனர். சிலர் மிகவும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். ஒரு வீட்டின் கதவைத் தட்டி அவர் வீட்டின் வழியாக புகுந்துபோக சொல்கிறது கூகுள் மேப் என ஒருவர் கிண்டலடித்துள்ளார்.
அவ்வப்போது சொதப்பினாலும் கூகுள் மேப்பில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. காரின் டிஸ்பிளேவுடன் இணைக்கப்பட்ட கூகுள் மேப் உங்கள் வேகத்தை உங்களுக்கு சரியாக எடுத்துச் சொல்லும். கூகுள் மேப்பில் உள்ள ஸ்பீடோமீட்டர் வசதி, நீங்கள் வரம்பைக் கடந்து வேகமெடுத்தால் எச்சரிக்கை செய்யும். இதனால் சரியான வேகத்திலேயே நீங்கள் காரை ஓட்டிச் செல்லலாம். ஸ்பீடோமீட்டரை ஆக்டீவெட் செய்ய ஏண்டுமென்றால் கூகுள் மேப் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். Google Map ப்ரபைலை க்ளிக்செய்து Settings ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் Navigation Settings ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்