மேலும் அறிய
Advertisement
Apple ios 15 : வெளியானது ஐஓஎஸ்15 அப்டேட்! என்னென்ன வசதிகள் இருக்கு ?
புதிய அறிவிப்பில் ஐஓஎஸ்15 Facetime, Imessage ,notification , photo உள்ளிட்டவற்றில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது
பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர் மாநாடு கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. இது வருகிற 11 ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. மாநாட்டில் ஐபோன் , ஐபேட், ஆப்பிள் வாட்ச், டிவி உள்ளிட்டவற்றின் புதிய இயங்குதள அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்கப்பட்ட நிலையில் ஐஓஎஸ் 15 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள் ளது .
ஐஓஎஸ்15 அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே இது குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களை வெளியாக தொடங்கிவிட்டன. அந்த அளவுக்கு இதன் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் வெளியான புதிய அறிவிப்பில் ஐஓஎஸ்15 Facetime, Imessage ,notification , photo உள்ளிட்டவற்றில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது .
ஃபேஸ் டைம் ( Facetime ):
ஃபேஸ் டைமை பொருத்த வரையில் spatial audio தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரில் அமர்ந்து பேசும் பொழுது ஏற்படக்கூடிய உணர்வை பயனாளர்கள் பெற முடியும் . வாய்ஸ் ஐசோலேஷன் மற்றும், ஸ்பெக்ட்ரம் என்ற இருவகையான வசதிகள் மூலம் உங்களின் குரலை தனியாகவோ அல்லது சுற்றுபுறத்தில் உள்ள சத்தத்துடனோ சேர்த்து கேட்கலாம் . இதே போல குழு அழைப்புகளுக்கான சில மாறுதல்களும் இடம்பெற்றுள்ளன. முகங்களை மட்டுமே ஃபோக்கஸ் செய்வதற்கான வசதிகளும் ஃபேஸ் டைம் அழைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. பேஸ் டைம் அழைப்பின் லிங்குகளை நண்பர்களுடன் பகிர்வது அவர்களுடன் இணைந்து படங்கள் பார்ப்பது போன்ற செயல்களுக்கான ஒத்திசைவு சேவைகளும் புதிய ஐஓஎஸ்15 இல் இடம்பெற்றுள்ளது.
டி.என்.டி மோட் (DND mode):
ஐஓஎஸ் 15 இல் "do not disturb " வசதி அறிமுகப்படுத்தப்படுள்ளது. இந்த வசதி மூலம் கவனச்சிதறல்கள் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்பதை ஊக்க்குவிக்க அறிமுகப்படுத்தப்படதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐகான் :
ஐஓஎஸ் 15 ஐ பொருத்தவரையில் ஐகானின் அளவுகளை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி, காண்டாக்ட்டில் இணைக்கப்படும் புதிய நபரின் புகைப்படங்களை பெரிதாக பார்க்கும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
இது தவிற புகைப்படங்களை சேமிப்பதில் புதுமை, புகைப்படங்களை தேடும் வசதி, விட்ஜெட் மாறுதல், மேப், கால நிலை வடிவமைப்பு போன்றவற்றிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐபோன் 7S க்கு இதன் அப்டேட் வழங்கப்பட்ட , இந்த ஆண்டிற்குள் மற்ற ஐபோன் மொபைல்ஃபோன்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே ஐபோன்கள் வெளியாகும் போது, அதற்கு உலகளாவிய எதிர்பார்ப்பு இருக்கும். முன்பதிவு இருக்கும். வாங்க முண்டியடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படியிருக்கும் அந்த ஐபோனில் பயன்படுத்தப்படும் ஐஓஎஸ்-க்கு அப்டேட் என்றால்சொல்லவா வேண்டும். நீண்ட நாட்களாக ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்ததும் அதற்கு தான். அதனால் இந்த அப்டேட் அவர்களை திருப்திபடுத்தும் என நிறுவனம் நம்புகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த அப்டேட் தான் ஐபோன் யூசர்களின் பரவலாகிய டாக்.
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion